Monthly Current Affairs Tamil – April, 2021

Monthly Current Affairs Tamil – April, 2021

 தமிழ்நாடு செய்திகள்

16-வது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
சமீபத்திய 16-வது சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மாநிலத்தில் 72.78% வாக்குகள் பதிவாகின.

83.92% வாக்குப் பதிவுடன் கரூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது

சென்னையில் 59.06% என்ற அளவில் குறைவான வாக்குகளே பதிவாகின.
 
அரியவகை கல்செக்கு
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் அரியவகை கல்செக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மண்ணில் புதைந்து கிடக்கும் இது 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 3 வரியில் கல்வெட்டு எழுத்துகள் இருந்தன.
 
சேம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருது 2020
இந்த விருது இந்தியப் பொருளாதாரம் மீதான ஊடாடும் மன்றம் என்ற அமைப்பு சார்பாக வழங்கப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு “சேம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருது – 2020“ விருது வழங்கப்பட்டது. அவருடைய சமூக நலத்திட்டங்களுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
 
ஐ.நா.வின் மூன்று அமைப்புகளுக்கு இந்தியா தேவு
சமீபத்தில் ஐ.நாவின் பொருளாதார மற்றும் சமூக மன்றத்தின் கீழ் இயங்கும் ஐ.நாவின் மூன்று அமைப்புகளுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
1. குற்றத் தடுப்பு மற்றும் நீதி வழங்கும் ஆணையம் (Commission of Crime Prevention and Criminal Justice – CCPCI)
2. பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான ஐ.நா அமைப்பின் நிர்வாக வாரியம்
3. உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக வாரியம் (World Food Programme – WFP) ஆகியவையாகும்.
இந்த மூன்று அமைப்புகளுக்கும் இந்தியா ஒரு முழுமையான ஒப்புதல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவின் 68-வது கிராண்ட்மாஸ்டர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த அர்ஜுன் கல்யாண் இந்தியாவின் 68-வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார்.

இவர் செர்பியாவில் நடைபெற்ற “ராபின் ருஜ்னா சோர் – 3“ என்ற கிராண்ட் மாஸ்டர் தகுதிக்கான 5-வது சுற்றில் டிராகன் கோசிக் என்பவரை வீழ்த்தி 2500 ELO (Chess rating) வரம்பினை கடந்து இப்பட்டத்தை வென்றுள்ளார்.

இவர் தனது 9-வது வயதில் சதுரங்கம் விளையாடத் தொடங்கி அடுத்த ஒரு வருடத்தில் FIDE தர வரிசையில் இடம் பெற்றார்.

IM சரவணன் மற்றும் ஒரு உக்ரேனிய கிராண்ட் மாஸ்டரான அலெக்சாண்டர் கோலோஷ் சாப்போவ் ஆகியோரிடம் அர்ஜுன் பயிற்சி பெற்றார்.
 

 மாநிலச் செய்திகள்

சிக்மோ திருவிழா நடைபெறாது
சிக்மோ திருவிழா என்பது கோவாவில் பழங்குடியினர் சமுதாயத்தால் கொண்டாடப்படும் வளமான மற்றும் பொன் நெல் அறுவடையினைக் கொண்டாடும் திருவிழாவாகும்.

வசந்த காலம் தொடங்குவதைக் குறிக்கும் இந்த திருவிழா குன்பீஸ், கௌடாஸ் மற்றும் வெளிப்ஸ் போன்ற விவசாய சமுதாயத்தினரால் கொண்டாடப்படுகிறது

சிக்மோ திருவிழா ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெற இருந்தது. இந்த ஆண்டு திடீரென கோவிட்-19 தொற்றுப் பாதிப்புகள் உயர்ந்துள்ளதால் திருவிழாவின் அணிவகுப்புகள் நடைபெறாது என கோவா அரசு அறிவித்துள்ளது.
 
வாழைப்பழ திருவிழா
பாரம்பரிய நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக உத்தரப் பிரதேச அரசு 2018-ஆம் ஆண்டில் “ஒரு மாவட்டம் ஒரு உற்பத்திப் பொருள்” (One District One Product-ODOP) திட்டத்தை உருவாக்கியுள்ளது.

உத்தரப் பிரதேச அரசு குஷிநகரில் ”வாழைப்பழ திருவிழாவினை” ஏற்பாடு செய்தது இதில் குறைந்தது 35 விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்கள் பங்கேற்றனர்.

வாழை மர இழைகளிலிருந்து தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருட்கள் ODOP திட்டத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 
ஆற்றல் திறன்மிகு நகரங்கள்
இரண்டு பசுமை ஆற்றல் திறன்மிகு நகரங்ளைக் கொண்ட மாநிலமாக பீகார் மாற உள்ளது. இரு நகரங்கள் ராஜ்கிர் மற்றும் புத்த கயா.

இத்திட்டத்தை அமல்படுத்துவதற்காக பீகார் மாநில அரசு, லக்கிசராய் மற்றும் பாகல்பூர் ஆகிய இடங்களில் 500 மெகாவாட் திறனுடைய சூரிய ஆற்றல் நிலையங்களை அமைக்க உள்ளது.

இரு நகரங்களை இயக்குவதற்கான ஆற்றலானது இந்திய சூரிய ஆற்றல் கழகத்தினால் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படும்.
 
சிறைச்சாலை வானெலி
சிறைச்சாலை வானெலி என்பது கைதிகளால் சிறைச்சாலைக்கு உள்ளேயே இயக்கப்பட்டு நடத்தப்படுகின்ற வானொலி.

வளாகத்திற்குள்ளேயே உள்ள காட்சிப்படக் கூடத்திலிருந்து ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் கைதிகள் தங்கியிருக்கும் அறைகளிலுள்ள ஒலி்பெருக்கிகள் மூலம் அவர்களைச் சென்றடையும்.

”டின்கா டின்கா” என்ற அறக்கட்டளையானது மாநில அரசுடன் இணைந்து ஹரியானா சிறைச்சாலைகளில் ”சிறைச்சாலை வானொலி“ திட்டத்தை தொடங்கியுள்ளது.
 
உத்கல் திவாஸ்
ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் ஒடிசாவானது தற்போதைய பீகார், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகியவற்றை உள்ளடக்கிய வங்காள மாகாணத்தின் ஓர் அங்கமாக இருந்தது.

உத்கல் திவாஸ் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 01 அன்று ஒடிசா மாநிலம் உருவாக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
 
பெண்களுக்கு இலவசப் பேருந்து வசதி
ஏப்ரல் 01 முதல் பஞ்சாப் மாநிலத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமகப் பயணம் செய்யலாம் என அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையிலான மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இத்திட்டம் சுமார் 1.31 கோடி பெண்களுக்குப் பயன் அளிக்கும்.

Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the cup.