Monthly Current Affairs Tamil – March, 2021

Monthly Current Affairs Tamil – March, 2021

 தமிழ்நாடு செய்திகள்

வன்னியர்களுக்கான உள்இடஒதுக்கீடு
தமிழக அரசானது பிப்பரவரி 26 அன்று மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (V) பிரிவின் கீழ் உள்ள சமூகத்திற்கு தற்காலிகமாக 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

25 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் 68 சீர் மரபினரையும், மீதமுள்ள 22 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களையும் உள்ளடக்கியதாகும்.

வன்னிய குல சத்திரியர் சமூகத்தில் வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், கவுண்டர், படையாட்சி, பள்ளி மற்றும் அக்னி குல சத்திரியர் ஆகியோர் அடங்குவர்.

இந்த மசோதா சீர் மரபினர் சமூகங்களுக்கும் மற்றும் அதைப் போன்றுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கும் 7% உள் ஒதுக்கீட்டை வழங்குகிறது.

மேற்கண்ட பிரிவில் சேர்க்கப்படாத பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு 2.5% ஒதுக்கீடு வழங்கப்பட இருக்கிறது.
 
ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையம்
சேலம் தலைவாசல் அருகே கால்நடை மற்றும் விலங்கு அறிவியலில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிக்கான மேம்பட்ட நிறுவனத்தை (AIIRLAS – Advanced Institute of Integrated Research in Livestock and Animal Science) தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி மையமாகும்.

நான்கு பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது
1. கால்நடை பண்ணை வளாகம்
2. கால்நடை பொருட்கள் தொழில்நுட்ப வளாகம்
3. விரிவாக்கக் கல்வி, திறன் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வளாகம்
4. கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
 
நம்ம சென்னை ஸ்மார்ட் அட்டை (திறன் மிகு அட்டை)
நம்ம சென்னை ஸ்மார்ட் அட்டை என்பது ரூபேவினால் ஆதரிக்கப்பட்டு இணைந்து வழங்கப்படுகின்ற, நேரடித் தொடர்பற்ற ஒரு முன் கூட்டியே பணம் செலுத்தல் அட்டை ஆகும்.

பெருநகர சென்னை மாநகராட்சி மையங்களில் வரி மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்த வழி வகை செய்கின்றது.

ஐசிஐசிஐ வங்கியானது பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பொலிவுறு நகர நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.
 
புதிய உணவுப் பூங்கா
2020-21-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த திரு.பன்னீர் செல்வம் அவர்கள் தமிழ்நாடு அரசு திருநெல்வேலியில் உள்ள கங்கை கொண்டானில் ஒரு மிகப்பெரிய உணவுப் பூங்கா ஒன்றை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் உணவுப் பூங்காக்கள் அமைப்பதற்கு பரிந்துரைத்துள்ளார்.

இவை பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனாவின் கீழ் அமைக்கப்படுகின்றன.
 
ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதுகள்
புகழ்பெற்ற திரைப்பட நடிகர் / நடிகைகளான B.சரோஜா தேவி மற்றும் சௌகார் ஜானகி, புகழ்பெற்ற பின்னணிப் பாடகர்களான பி.சுசிலா மற்றும் ஜமுனா ராணி மற்றும் பரதநாட்டியக் கலைஞர்களான அம்பிகா காமேஸ்வர் மற்றும் பார்வதி ரவி கந்தாசாலா ஆகியோர் 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டிற்கான புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா சிறப்பு விருதுகளுக்காகத் தமிழக அரசினால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

புகழ்பெற்ற கலைஞர்களான வாணி ஜெயராம் மற்றும் S.ராஜேஸ்வரி ஆகியோர் முறையே 2019 மற்றும் 2020 ஆண்டுகளுக்கான அகில இந்திய விருதான பாலசரஸ்வதி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாட்சி தமிழ் இசைச் சங்கம் மற்றும் மதுரையில் ராஜா முத்தையா மன்றத்தில் உள்ள தமிழ் இசைச் சங்கம் ஆகியவை சிறந்த கலாச்சார அமைப்புகளுக்கான கேடயங்களைப் பெற இருக்கின்றன.

திருவண்ணாமலையில் உள்ள சபரி நாடகக் குழுவானது சிறந்த நாடகக் குழுவிற்காக சுழல் கேடயத்தைப் பெற இருக்கின்றது.
 
எம்ஜிஆர் பாரம்பரிய நெல் பாதுகாப்பாளர் விருது 2021
பாரத் ரத்னா டாக்டர் எம்ஜிஆர் பாரம்பரிய நெல் வகைப் பாதுகாப்பாளர் விருதானது பாரம்பரிய நெல் வகையைப் பயிரிடும் விசவாயிகளை ஆதரிப்பதற்காகவும் பாரம்பரிய வகைகளை பாதுபாப்பதற்காகவும் வேண்டி வழங்கப்பட உள்ளது.

விருது பெற்றவர்கள்
1. N.சக்திபிரகாஷ் – நாமக்கல்
2. S.வேல்முருகன் – சேலம்
3. P.சிவராமன் – சிவகங்கை
 
மூன்றாம் உலகத் திருக்குறள் மாநாடு
மூன்றாம் உலகத் திருக்குறள் மாநாடு தஞ்சாவூரில் நடைபெற்றது

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பாரத் அறிவியல் கல்லூரி, ஆஸ்திரேலியா மெல்போர்ன் தமிழ்ச் சங்கம், இளங்காடு நற்றமிழ் சங்கம் மற்றும் தஞ்சாவூர் தமிழ்த் தாய் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பாக நடத்தப்பட்டது
 
கீழடி அகழாய்வு 7-வது கட்டம்
கீழடியின் 7-வது கட்ட அகழாய்வில் சிதிலமடைந்த களிமண்ணால் ஆன மூடி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீரைப் பிடிக்க பயன்படும் குமிழியுடன் கூடிய மூடி போன்ற அமைப்பை உடைய மண்பாட்டத்தை ஒத்துள்ளது. இது 2600 வருட்ஙகள் பழமையானது எனக் கூறப்படுகிறது.
 
மட்பாண்ட ஓடுகள்
சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துப் படிவத்தை ஒத்த வெட்டெழுத்துக்களைக் கொண்ட மட்பாண்ட ஓடுகள் ராமநாதபுரத்தில் உள்ள உத்திரகோசமங்கை என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு ராமநாதபுரம் கீழக்கரையில் சேதுபதி காலத்தைச் சேர்ந்த திரிசூல முத்திரையுடன் சீன மட்பாண்ட ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
மிட்ராக்ளிப்
மிட்ராக்ளிப் மருதத்துவ நடைமுறையில் பயன்படுத்தப்படுமு் குறைந்தபட்ச ஊடுருவும் சிகிச்சை முறை என்பது இதயத்தைத் திறந்து செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு அவசியமில்லாமல், கசியும் மிட்ரல் வால்வைச் சரி செய்ய உதவுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த அப்போலோ மருத்துவமனைகள் குழுமமானது ஆசியாவிலேயே மதல் முறையாக ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு மிட்ராக்ளிப் மருத்துவச் சிகிச்சையை வெற்றிகராக மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.

Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the car.