Monthly Current Affairs Tamil – February, 2021

Monthly Current Affairs Tamil – February, 2021

 தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு மாநில விருதுகள் :-
அதிக அரிசி உற்பத்தித் திறனுக்கான சி. நாராயணசாமி நாயுடு விருதானது வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜி.செல்வ குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.அப்துல் ஜபார் அவர்கள் 2021-ம் ஆண்டுக்கான கோட்டை அமீர் மத நல்லிணக்க விருதைப் பெற்றார்.

நான்கு காவல் துறையினருக்கு காந்தியடிகள் காவல் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
1. டி. மகுடேஸ்வரி –புனித தோமையார் மலை
2. என். செல்வராஜூ –சேலம்
3. எஸ். சண்முகநாதன் –ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும்
4. எஸ். இராஜசேகரன் –திருவண்ணாமலை
 
வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்தைப் பெற்றவர்கள் :-
பி. முல்லை –LPGஉருளை வெடித்த ஒரு விபத்திலிருந்து 26மாணவர்களைக் காப்பாற்றிய ஆசிரியை

ஏ. பிரகாஷ் –60 அடி ஆழமான கிணற்றில் விழுந்த யானையை மீட்பதில் ஈடுபட்ட வனக் கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர்.

லோகோ பைலட் ஜே. சுரேஷ் –இரயிலிலிருந்த 1>500-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றியவர்.
 
முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடம் :-
அனைத்துக் கடினமான சூழ்நிலைகளிலுமிருந்து மீண்டெழுந்த அசரது அரசியல் எழுச்சியைச் சித்தரிக்க வேண்டி இது ஒரு பீனிக்ஸ் பறவை போல உருவாக்கப்பட்டுள்ளது.

அவரது ‘மக்களால் நான் மக்களுக்காக நான்’என்ற முழக்கமானது அவரது கல்லரையில் பிரகாசமாக பொறிக்கப்பட்டுள்ளது.
 
ஸ்மார்ட் மற்றும் அடுத்த தலைமுறை இருசக்கர வாகனங்கள் :-
ஸ்மார்ட் மற்றும் அடுத்த தலைமுறை இருசக்கர வாகனங்களை சென்னை மெரினா கடற்கரையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அறிமுகப்படுத்தினார்.

இது சென்னைப் பெருநகர மாநகராட்சி மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதி.

இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் – மதராசின் கலச்சாரத் திருவிழா‘சாரங்’

மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது அந்நிறுவனத்தின் ஒரு வருடாந்திர கலாச்சாரத் திருவிழாவான‘ சாரங்’ என்ற ஆண்டு இணைய தள ரீதியில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இது அதன் முதலாவது ஆன்லைன் பதிப்பாகும்.

இந்த ஆண்டின் சாரங் விழாவிற்கான கருத்துரு ‘Vintage Vogue’ என்பதாகும்.
 
புதிய திட்டங்கள் மற்றும் நல உதவிகள்
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பிப்ரவரி 13 அன்று பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வுத் தளத்தில் 7-வது கட்ட அகழாய்வைத் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பாயும் தாமிரபரணி நதியின் குறுக்கே 4 தடுப்பு அணைகளைக் கட்டுவதற்காக அடிக்கல்லை நாட்டினார்.
 

தேசியச் செய்திகள்

NCLAT சென்னை அமர்வு :-
தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின்(National Company Law Appellate Tribunal – NCLAT)சென்னை அமர்வை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் திறந்து வைத்தார்.

இது கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளின் மீது அதிகார வரம்பைக் கொண்டிருக்கும்.
 
குடியரசுத் தின அணிவகுப்பில் வங்க தேச இராணுவம் :-
முதன்முறையாக>வங்க தேச முப்படைகளின் அணிவகுப்புப் படையானது குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கு பெற்றது.

இது 1971-ஆம் ஆண்டுப் போரில் பாகிஸ்தானிற்கு எதிரான இந்தியாவின் வெற்றியை அனுசரிக்கின்றது.

இந்தப் போர் வங்க தேசத்தின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.

வங்க தேச ஆயுதப் படைகளின் 122 நபர்களைக் கொண்ட ஒரு படைப்பிரிவானது வங்க தேச இராணுவம் கடற்படை>விமானப் படையைச் சேர்ந்த வீரர்களைக் கொண்டு இதி;ல் பங்கேற்றுள்ளது.

இது படைப்பிரிவு தலைமைத் தளபதியான அபு முகம்மது சாஹ்னூர் சவோன் மற்றும் அவரது துணை அதிகாரிகளால் வழி நடத்தப்பட்டது.

இதைப் புதுதில்லியில் சுற்றுச்சூழல்>வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கடல் ஆமை செயல் திட்டத்துடன் சேர்த்து‘Marine Mega Fauna Stranding Guidelines’என்ற விதிமுறைகளையும் அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த இரண்டு ஆவணங்களிலும் சுகாதார ரீதியானது பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான வழிகள் மற்றும் நடவடிக்கைகள் அடங்கும்
 
IAEஉடனான இந்தியாவின் ஒப்பந்தம் :-
சர்வதேச எரிசக்தி முகமை உறுப்பினர்களுக்கும் (IEA – International Energy Agency) இந்திய அரசாங்கத்திற்கும் இடையிலான ஒரு மூலோபாயக் கூட்டாண்மைக்கான கட்டமைப்பு சமீபத்தில் கையெழுத்தானது.

இந்தக் கட்டமைப்பானது பரஸ்பர நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்பு>உறுதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும்.

இது IEA அமைப்பில் ஒரு முழு உறுப்பினராக இந்தியா உருவாவதை நோக்கிய ஒரு படியாக அமையும்.

IEA என்பது அரசுகளுக்கிடையேயான ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.

இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டமைப்பின் படி 1974-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the Flag.