Current Affairs in Tamil – April-30, 2021

Current Affairs in Tamil – April-30, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஏப்ரல் – 30, 2021

தேசியச் செய்திகள்

கோவிராப்

  • கரக்பூரின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தனது முதன்மை சுகாதார தயாரிப்பான கோவிராப் என்ற ஒரு கருவியினை (COVIRAP) வெற்றிகரமான வணிகப்படுத்தியுள்ளது.
  • கோவிட்-19 மற்றும் அதற்கு மேற்பட்ட தொற்றுநோய்களைக் கண்டறிய இந்த புதிய நோய்க் கண்டறியும் தொழில் நுட்பம் உதவும்.
  • இந்த கையடக்கமான கருவியைப் பயன்படுத்தி ஒரு சுருட்டப்பட்ட பஞ்சு மூலம் சேகரிக்கப்பட்ட மனிதனின் மாதிரிகளிலிருந்து கோவிட்-19 தொற்றைக் கண்டறியும் சோதனையை நடத்த இயலும்.

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன் யோஜனா

  • 2021-ஆம் ஆண்டு ஜுன் வரை பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன் யோஜனாவின் கீழ் 5 கிலோகிராம் உணவு தானியங்களை இலவசமாக வழங்க உள்ளதாக இந்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
  • தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 என்ற சட்டத்தின் கீழ், சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.
  • இத்திட்டம் 2020-ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகத்தினால் தொடங்கி வைக்கப்பட்டது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

MOXIE

  • நாசாவின் 2020-ஆம் ஆண்டுத் திட்டமான செவ்வாய்க் கிரகத்திற்கான பெர்சீவரன்ஸ் என்ற விண்கலனானது சமீபத்தில் கார்பன் டை ஆக்சைடை ஆக்சிஜனாக மாற்றியது.
  • மற்றொரு கோளில் இவ்வாறு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்
  • இந்த விண்கலனில் முன்பகுதியில் பொருத்தப்பட்ட (MOXIE – Mars Oxygen in-Situ Resource Utilization Experiments) எனும் கருவியினால் இச்சாதனை மேற்கொள்ளப்பட்டது. MOXIE என்பது ”இயந்திர மரம்” எனவும் அழைக்கப்படுகிறது

விருதுகள்

ஆஸ்கர் 2021 – முதல் ஆசியப் பெண்

  • சோலி சாவோ என்பவர் அகாதமி விருதுகளில் சிறந்த இயக்குநர் விருது பெற்ற முதல் ஆசியப் பெண் மற்றும் இரண்டாவது பெண் இயக்குனர் ஆவார்.
  • சீனாவில் பிறந்த இவர் நொமாட்லாண்ட் என்ற திரைப்படத்தை இயக்கியதோடு அதற்குத் திரைக்கதை எழுதி அப்படத்தைத் தொகுத்தும் உள்ளார்.

முக்கிய தினங்கள்

ஏப்ரல் – 30 ஆயுஷ்மான் பாரத் தினம்

  • ஆயுஷ்மான் பாரத் தினம் 2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் பிரதமர் மோடியால் துவக்கிவைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சுகாதார நலத்திட்டம்.
  • இது ஏழை மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்தச் செய்திட எண்ணுவதோடு அவர்களுக்கு காப்பீட்டு பலன்களையும் ஏற்படுத்தித் தருவதற்கு எண்ணுகின்றது.
  • இந்த வருடத்திற்கான கருத்து : ”உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பீர், உங்கள் செல்வத்தைச் சேமிப்பீர்”
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the Flag.