Category: Daily Current Affairs Tamil

Current Affairs in Tamil – May-3, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

மே – 3, 2021

தேசியச் செய்திகள்

கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவி எண்

 • பெண்களுக்கான தேசிய ஆணையமானது சமீபத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கான கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) உதவி எண் 9354954224 எண்ணினை வெளியிட்டுள்ளது.
 • இந்த எண்ணிற்கு குறுஞ்செய்தி மட்டுமே அனுப்ப முடியும்
 • இந்த எண் நாடு முழுவதுமுள்ள மகப்பேறு நிலையில் உள்ள தாய்மார்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக நாள் முழுவதும் செயல்படும் வகையிலானதாகும்.

கோவிட்-19 மாதிரிகளைச் சேகரிக்கும் புதிய தொழில்நுட்பம்

 • செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குநரான ராகேஷ் மிஷ்ரா,

read more…

Current Affairs in Tamil – May-2, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

மே – 2, 2021

தமிழ்நாடு

காவல் கரங்கள்

 • சென்னையில் “காவல் கரங்கள்“ என்ற புதிய ஒருங்கிணைந்த திட்டத்தை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் துவக்கி வைத்தார்
 • சாலைகளில் ஆதரவின்றி தவிக்கும் முதியோர், பெண்கள், சிறுவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யும் வகையில் காவல் கரங்கள் என்ற புதிய திட்டத்தை சென்னைப் பெருநகர காவல்துறை தொடங்கி உள்ளது.

முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட வீடு

 • முப்பரிமாண அச்சிடல் முறை என்பது டிஜிட்டல் வழிகாட்டுதல்கள் மூலம் முப்பரிமாணப் பொருட்களை உருவாக்கும் ஒரு செயல்முறை
 • மத்திய நிதி அமைச்சா நிர்மலா சீதாராமன் அவர்கள் சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்ததில் அமைக்கபட்டுள்ள முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட முதல் வீட்டினைத் திறந்து வைத்தார்
 • இது முப்பரிமாண அச்சிடல் (3D Printed) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெறும் 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.

read more…

Current Affairs in Tamil – May-1, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

மே – 1, 2021

மாநிலச் செய்திகள்

மிண்னணுப் பஞ்சாயத்து புரஷ்கர் விருது 2021

 • ஒவ்வொரு வருடமும் கிராமப் பஞ்சாயத்துகளில் அதிகளவில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வழிவகை செய்யும் மாநிலங்களுக்கு மத்திய கிராமப் பஞ்சாயத்து அமைச்சகம் இந்த விருதுகளை வழங்குகிறது.
 • உத்தரப் பிரதேச அரசு 2021-ஆம் ஆண்டிற்கான மின்னணுப் பஞ்சாயத்து (இ-பஞ்சாயத்து) புரஷ்கர் விருதினை வென்றுள்ளது.
 • அசாம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை இரண்டாமிடத்திலும் ஒடிசா மற்றும் தமிழ்நாடு மூன்றாமிடத்தில் உள்ளன.

தமிழ்நாடு

“பைரசோல்“ திட்டம்

 • சென்னையில் ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் உலர்த்தி மற்றும் வெப்பத்தாற்பகுப்பு சோதனை ஆலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது
 • இச்சோதனை ஆலையானது இந்தே-ஜெர்மானிய திட்டமான “பைரசோலின்“ ஓர் அங்கமாகும்.

read more…

Current Affairs in Tamil – April-30, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஏப்ரல் – 30, 2021

தேசியச் செய்திகள்

கோவிராப்

 • கரக்பூரின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தனது முதன்மை சுகாதார தயாரிப்பான கோவிராப் என்ற ஒரு கருவியினை (COVIRAP) வெற்றிகரமான வணிகப்படுத்தியுள்ளது.
 • கோவிட்-19 மற்றும் அதற்கு மேற்பட்ட தொற்றுநோய்களைக் கண்டறிய இந்த புதிய நோய்க் கண்டறியும் தொழில் நுட்பம் உதவும்.
 • இந்த கையடக்கமான கருவியைப் பயன்படுத்தி ஒரு சுருட்டப்பட்ட பஞ்சு மூலம் சேகரிக்கப்பட்ட மனிதனின் மாதிரிகளிலிருந்து கோவிட்-19 தொற்றைக் கண்டறியும் சோதனையை நடத்த இயலும்.

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன் யோஜனா

 • 2021-ஆம் ஆண்டு ஜுன் வரை பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன் யோஜனாவின் கீழ் 5 கிலோகிராம் உணவு தானியங்களை இலவசமாக வழங்க உள்ளதாக இந்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.

read more…

Current Affairs in Tamil – April-29, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஏப்ரல் – 29, 2021

தேசியச் செய்திகள்

உலகளாவிய ஆற்றல் ஆய்வு அறிக்கை

 • சர்வதேச எரிசக்தி முகமையானது (International Energy Agency – IEA) சமீபத்தில் உலகளாவிய ஆற்றல் ஆய்வு அறிக்கையினை வெளியிட்டது.

இந்தியாவில்

 • 2019-ம் ஆண்டில் பதிவானதை விட இந்த ஆண்டில் கார்டன்-டை-ஆக்சைடு வெளியீடு 1.4% அதிகமாக உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
 • புதுப்பிக்கக் கூடிய ஆற்றலிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆற்றலின் அதிகரிப்பினை விட நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட இருக்கின்றது.
 • பாரீஸ் உடன்படிக்கையின்கீழ் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் கார்பன் வெளியீட்டின் தீவிரத்தை 33% என்ற அளவிலிருந்து 35% வரை குறைப்பதற்கு இந்தியா உறுதி மேற்கொண்டுள்ளது.

read more…

Current Affairs in Tamil – April-28, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஏப்ரல் – 28, 2021

தேசியச் செய்திகள்

மின்னணு சொத்து அட்டைகள் :

 • சுவாமித்வா திட்டத்தின்கீழ் மின்னணு சொத்து அட்டைகள் (E-Property Cords) வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
 • சுவாமித்வா திட்டமானது 2020-ம் ஆண்டில் தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று தொடங்கப்பட்டது.
 • இத்திட்டத்தின் கீழ் 2020 மற்றும் 2024 ஆகிய கால கட்டங்களுக்கிடையே வரைபடமிடலானது நிலைவாரியாக (Phase-wise) மேற்கொள்ளப்படும்.
 • இத்திட்டத்தின் கீழ் நிலப்பரப்புகள் ஆளில்லா விமானங்களை (Drones) பயன்படுத்தி வரைபடமிடப்படும்.
 • தற்போது இத்திட்டமானது கர்நாடகா,

read more…

Current Affairs in Tamil – April-27, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஏப்ரல் – 27, 2021

தேசியச் செய்திகள்

இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் வீழ்ச்சி

 • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகமானது 2021-21-ஆம் ஆண்டிற்கான தரவுகளை சமீபத்தில் வெளியிட்டது.
 • இந்தத் தரவுகளின் படி, இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியான 30.5 மில்லியன் டன்களாக குறைந்துள்ளது.
 • 2019-20-ஆம் நிதி ஆண்டில் அதன் உற்பத்தி 32.17 மில்லியன் டன்களாக இருந்தது.
 • முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020-21-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியானது 5% குறைந்துள்ளது.
 • 2020-21-ஆம் நிதி ஆண்டில் இயற்கை எரிவாயுவின் உற்பத்தியானது 28.67 பில்லியன் கன மீட்டர்களாக இருந்தது.

read more…

Current Affairs in Tamil – April-26, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஏப்ரல் – 26, 2021

தமிழ்நாடு

இந்தியாவின் 68-வது கிராண்ட்மாஸ்டர்

 • தமிழ்நாட்டைச் சேர்ந்த அர்ஜுன் கல்யாண் இந்தியாவின் 68-வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார்.
 • இவர் செர்பியாவில் நடைபெற்ற “ராபின் ருஜ்னா சோர் – 3“ என்ற கிராண்ட் மாஸ்டர் தகுதிக்கான 5-வது சுற்றில் டிராகன் கோசிக் என்பவரை வீழ்த்தி 2500 ELO (Chess rating) வரம்பினை கடந்து இப்பட்டத்தை வென்றுள்ளார்.
 • இவர் தனது 9-வது வயதில் சதுரங்கம் விளையாடத் தொடங்கி அடுத்த ஒரு வருடத்தில் FIDE தர வரிசையில் இடம் பெற்றார்.
 • IM சரவணன் மற்றும் ஒரு உக்ரேனிய கிராண்ட் மாஸ்டரான அலெக்சாண்டர் கோலோஷ் சாப்போவ் ஆகியோரிடம் அர்ஜுன் பயிற்சி பெற்றார்.

read more…

Current Affairs in Tamil – April-25, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஏப்ரல் – 25, 2021

தமிழ்நாடு

ஐ.நா.வின் மூன்று அமைப்புகளுக்கு இந்தியா தேவு

 • சமீபத்தில் ஐ.நாவின் பொருளாதார மற்றும் சமூக மன்றத்தின் கீழ் இயங்கும் ஐ.நாவின் மூன்று அமைப்புகளுக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 • குற்றத் தடுப்பு மற்றும் நீதி வழங்கும் ஆணையம் (Commission of Crime Prevention and Criminal Justice – CCPCI)
 • பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான ஐ.நா அமைப்பின் நிர்வாக வாரியம்
 • உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக வாரியம் (World Food Programme – WFP) ஆகியவையாகும்.

read more…

Current Affairs in Tamil – April-24, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஏப்ரல் – 24, 2021

தமிழ்நாடு

சேம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருது 2020

 • இந்த விருது இந்தியப் பொருளாதாரம் மீதான ஊடாடும் மன்றம் என்ற அமைப்பு சார்பாக வழங்கப்பட்டது.
 • திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு “சேம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருது – 2020“ விருது வழங்கப்பட்டது. அவருடைய சமூக நலத்திட்டங்களுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதாரச் செய்திகள்

மெகா உணவுப் பூங்கா

 • சமீபத்தில் இத்தாலியானது, குஜராத்தின் மெஹசானா மாவட்டத்தில் உள்ள ஃபனிதர் என்ற நகரில் முதல் “மெகா உணவுப் பூங்காவை“ அறிமுகப்படுத்தியது
 • நாட்டில் தொடங்கப்பட்ட முதல் இத்தாலிய-இந்திய உணவுப் பூங்கா திட்டம்.

read more…

Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

  Please prove you are human by selecting the Flag.