நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 2019

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 2019

  • எந்தவொரு வாக்காளரும் விடுபட்டு விடாமல் இருப்பது என்பதை நோக்கமாகக் கொண்ட குறைபாடுடைய நபர்களுக்காக “எனஜோரி முன்னெடுப்பை” (Enajori initiative) அசாம் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி “முகேஷ் சாகு” கௌகாத்தில் தொடங்கி வைத்துள்ளார்.
  • இஸ்ரேல் நாட்டில் உலகிலேயே மிக நீளமான உப்பு குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு “மால்கம்” என பெயரிட்டுள்ளனர். சாக்கடல் எனப்படும் “டெட் சீ (Dead Sea)” ஒட்டி தென் மேற்கு மூலையில் அமைந்துள்ளது.
  • 2019ம் ஆண்டிற்கான கடற்படை முதலீட்டு விழா மும்பையின் மேற்கு கடற்படையின் (WNC) ஹெலிகாப்டர் கப்பல் தளமான ஐஎன்எஸ் ஷிக்ராவில் நடைபெற்றது. விழாவில் கடற்படை டாக்யர்ட் (வைசாக்) மற்றும் ஐஎன்எஸ் துவார்கா ஆகியவையின் பசுமை சுற்றுச்சூழல் முயற்சிகளுக்காக ‘சிறந்த பசுமை நடைமுறைக்கான சிஎன்எஸ் டிராபி’ வழங்கப்பட்டுள்ளது.
  • ராஜீவ் கேல் ரத்னா, அர்ஜீனா விருதுகளுக்கு வீரர்களின் பெயர்களை பல்வேறு விளையாட்டு சம்மேளனங்கள் பரிந்துரைத்துள்ளன. இந்திய மல்யுத்த சம்மேளனம் சார்பில் ஆசிய சாம்பியன் பஜ்ரங் புனியா ஆசிய போட்டி சாம்பியன் வினேஷ் போகட் ஆகியோரது பெயர்கள் ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கும், ராகுல் அவாரே, ஹர்ப்ரீத் சிங், பூஜா திண்டா ஆகியோரது பெயர்கள் அர்ஜீனா விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
  • அர்ஜுனா விருதை பெற்ற கேல்ஃப் வீரரான ககன்ஜுத் புல்லார் டெல்லி கோல்ஃப் கிளப்பில் வருடாந்திர இந்திய கோல்ஃப் தொழில் சங்கத்தின் நான்காவது பதிப்பில் சிறந்த சாதனை படைத்தமைக்காக விருதளித்தனர்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the key.