CURRENT AFFAIRS – 2022
JANUARY – 03, 2022
தேசியச் செய்திகள்
பினா- பாங்கி பல்மாதிரி குழாய் இணைப்புத் திட்டம்
- பிரதமர் நரேந்திர மோடி, பாங்கி (கான்பூர், உத்தரப் பிரதேசம்) பல்மாதிரிக் குழாய் இணைப்பு அமைப்பில் 356 கி.மீ நீளமுள்ள பினா என்ற சுத்திகரிப்பு நிலையத்தினை (மத்தியப் பிரதேசம்) திறந்து வைத்தார்.
- இது பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் தயாரிப்புகளை மிகவும் பாதுகாப்பான மற்றும் திறம் மிக்க முறையில் விநியோக செய்ய உதவும்.
- மேலும் கிழக்கு உத்தரப் பிரதேசம், மத்திய உத்தரப் பிரதேசம், வடக்குப் பீகார் மற்றும் தெற்கு உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் தயாரிப்பு்ப பொருட்கள் கிடைக்கும் வாய்ப்புகளை இது மேம்படுத்தும்.
பிரம்மோஸ் ஏவுகணை
- லக்னோவில் நிறுவப்பட உள்ள பிரம்மோஸ் வான்வெளி ஏவுகணை தயாரிப்புப் பிரிவுக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்.
- லக்னோவில் நிறுவப்பட உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பாதுகாப்புத் தொழில்நுட்பம் மற்றும் சோதனை மையத்திற்கும் அவர் அடிக்கலை நாட்டினார்.
- பிரம்மோஸ் என்பது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் ரஷ்யாவின் NPOM அமைப்பு ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சி ஆகும்.
- பிரம்மோஸ் ஏவுகணைக்கு இந்தியாவின் பிரம்மபுத்திரா நதி மற்றும் ரஷ்யாவின் மோஸ்க்வா நதி ஆகியவற்றிலிருந்துப் பெயரிடப்பட்டது.
சர்வதேசச் செய்திகள்
BRICS பொருளாதார அறிக்கை 2021
- இந்திய ரிசர்வ் வங்கியானது 2021 ஆம் ஆண்டிற்கான BRICS பொருளாதார அறிக்கை என்பதினை வெளியிட்டது.
- இது BRICS மத்திய வங்கிகளின் உறுப்பினர்களுடன் இணைந்து BRICS வருங்கால வைப்புச் சீரமைவு (CRA) என்ற ஆராய்ச்சிக் குழுவினால் தயாரிக்கப்பட்டது.
- இந்த அறிக்கையானது, பொருளாதார மீட்சி மற்றும் அதன் மாறுபாடுகள், பணவீக்க அபாயங்கள், வெளியுறவுத் துறை செயல்திறன், நிதித் துறைப் பாதிப்புகள் மற்றும் பிற பெரும் பிரிவு பொருளாதார அபாயங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய, “நடப்பில் உள்ள தொற்றுநோயை முறையாக நிர்வகித்தல்: BRICS நாடுகளின் பின்னடைவு மற்றும் மீட்சி அணுபவம்“ என்ற கருத்துருவினைக் குறிக்கிறது.
பொருளாதாரச் செய்திகள்
ஜவுளித் துறை-வரி விகிதம்
- ஜவுளித் துறைக்கான வரி விகிதத்தை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தச் செய்வதற்கான தனத முடிவை ஒத்தி வைக்க சரக்கு மற்றும் சேவை வரி சபையானது முடிவு செய்துள்ளது.
- இது ஜனவரி 01 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருந்தது.
- இனி ஜவுளிகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தில் தற்போதைய நிலையே தொடரும்.
மாநிலச் செய்திகள்
இணையப் பரிமாற்ற முனையங்கள் – உத்தரப் பிரதேசம்
- மத்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது உத்தரப் பிரதேசத்தில் ஏழு புதிய இணையப் பரிமாற்ற முனையங்களைத் தொடங்கியுள்ளது.
- இந்த முனையங்கள் அந்த மாநிலத்தில் இணைய இணைப்புகள் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
- இணையப் பரிமாற்ற முனையங்கள் லக்னோ, ஆக்ரா, மீரட், கான்பூர், பிரயாக்ராஜ், கோரக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் அமைக்கப்படும்.