Daily Current Affairs Tamil – JANUARY – 02, 2022

Daily Current Affairs Tamil – JANUARY – 02, 2022

CURRENT AFFAIRS – 2022

DECEMBER – 02, 2022

தேசியச் செய்திகள்

புலிகள் உயிரிழப்பு

  • 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 126 புலிகள் இறந்துள்ளதாக தேசியப் புலிகள் வளங் காப்பு ஆணையம் கூறுகிறது.
  • சமீபத்தில், மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா நகரில் புலி ஒன்று இறந்து கிடந்ததை அடுத்து 2021 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்ட புலிகள் உயிரிழப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
  • 44 புலிகள் இறப்புகளுடன் மத்தியப் பிரதேசம் முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களும் உள்ளன.

இந்திய குறைகடத்திகள் திட்டம்

  • தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்திய குறை கடத்திகள் திட்டம் என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கினார்.
  • இந்தத் திட்டமானது, டிஜிட்டல் இந்தியக் கழகத்தின் ஒரு சிறப்புமிக்க மற்றும் தன்னியக்க வணிகப் பிரிவாகும்.

தமிழ்நாடு செய்திகள்

நல்லிரக்கப் பண்புடையவர்களுக்கான விருது

  • ஒன்றிய சாலைத் துறை அமைச்சகமானது “நல்லிரக்கப் பண்புடையவர்கள்“ என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த அவசரமான சூழலில் உதவுவதற்கு முன் வருமாறு பொதுமக்களை ஊக்குவிப்பதற்காக இது அறிமுகப்படுத்தப்பட்டது.
  • சாலை விபத்தில் சிக்கியவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the Key.