CURRENT AFFAIRS – 2022
JANUARY – 01
தமிழ்நாடு செய்திகள்
சாகித்திய அகாடமி விருது-தமிழ்
- அம்பை என்பவருக்கு இந்த ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருதானது வழங்கப் பட்டுள்ளது.
- இந்த விருதானது ”சிவப்புச் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை” என்ற இவருடைய ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கு வேண்டி வழங்கப்பட்டுள்ளது.
- இந்த விருதினைப் பெறும் 4வது தமிழ் பெண் எழுத்தாளர் அம்பை ஆவார்.
- இவருடைய இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி என்பதாகும்.
- தமிழ் எழுத்தாளர் மு.முருகேஷ், தனது சிறுகதைகளுக்காக பால சாகித்திய புரஷ்கார் என்ற விருதினைப் பெற்றார்.
- அந்தப் புத்தகத்தின் பெயர் “அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை“ என்பது ஆகும்.
பெண்களுக்கான புதிய வரைவுக் கொள்கை 2021
- தமிழக அரசானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 29 அன்று பெண்களுக்கான புதிய வரைவுக் கொள்கையினை (2021) வெளியிட்டுள்ளது.
- இந்தக் கொள்கையானது 5 ஆண்டுகளுக்கு மேல் நடைமுறைப் படுத்தப்படும்.
- இந்தப் புதியக் கொள்கையானது பள்ளி மற்றும் கல்லூரிப் பெண்களுக்கு தற்காப்புக் கலைகள் குறித்த பயிற்சிகளை அளித்திட எண்ணுகின்றது.
தேசியச் செய்திகள்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் வீட்டு மனைகள் – இனி எவரும் வாங்கலாம்
- முதலாவது ஜம்மு மற்றும் காஷ்மீர் வீட்டு மனை மாநாடானது சமீபத்தில் ஜம்முவில் நடத்தப் பட்டது.
- அங்கு உள்ளுர் வீட்டு மனைகளை “இரண்டாம் நிலை வீடுகள் மற்றும் கோடைக் கால இல்லங்கள்“ என்ற வகையில் நாட்டின் அனைத்து குடிமகன்களும் வாங்கும் வகையில் வழி செய்வதற்கு மத்திய அரசும் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஒன்றியப் பிரதேச அரசும் முடிவு செய்துள்ளன.
- மிகப்பெரிய அளவில் வீட்டு மனை விற்பனை நிறுவனங்களின் முதலீடுகளை அங்கு ஈர்ப்பதற்காக வேண்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
- புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் மேம்பாட்டுச் சட்டத்தின கீழ் “மாநிலத்தின் நிரந்தரக் குடியிருப்பாளர்“ எனும் பிரிவானது “தவிர்க்கப்பட்டு“ , ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேராத முதலீட்டாளர்களும் இந்த ஒன்றியப் பிரதேசத்தில் முதலீடு செய்வதற்கு வழிவகுக்கப் பட்டிருக்கிறது.
- இதன் விளைவாக, இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் விவசாயம் சாரா நிலத்தினை வாங்க இயலும்.
கடும் குளிரான வானிலைக்கான ஆடை அமைப்பு
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கடும் குளிரான வானிலையையும் தாங்கக் கூடிய ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்பத்தினை சில இந்திய நிறுவனங்களிடம் ஒப்படைத்து உள்ளது.
- இந்த ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்பமானது அதிக உயரத்தில் மேற்கொள்ளப்படும் போர் நடவடிக்கைகளில் நிலவும் வெவ்வேறு பருவநிலைகளிலும் பயன்படுத்தக் கூடிய, பனிச்சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட, 3 அடுக்கிலான தொழில்நுட்ப ஆடை ஆகும்.
மாநிலச் செய்திகள்
நாகாலாந்து – கலகம் நிறைந்த பகுதி
- மத்திய அரசானது ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் என்ற சட்டத்தின் கீழ், முழு நாகாலாந்து மாநிலத்தினையும் மேலும் 6 மாதங்களுக்கு கலகம் நிறைந்த பகுதியாக அறிவித்தது.
- இந்த அறிவிப்பானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 30 முதல் நடைமுறைக்கு வரும்.
- மேலும் அந்த மாநிலத்தின் நிலைமையினைக் கலகம் நிறைந்த மற்றும் ஆபத்தான பகுதி எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. நாகாலாந்திலிருந்து, சர்ச்சை மிக்க ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தினை திரும்பப் பெறுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக என்று நிறுவப்பட்ட ஒரு உயர்மட்டக் குழுவினை மத்திய அரசு நிறுவியதையடுத்த ஒரு சில நாட்களில் இந்த முடிவானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.