Daily Current Affairs Tamil – DECEMBER-31, 2021

Daily Current Affairs Tamil – DECEMBER-31, 2021

CURRENT AFFAIRS – 2021

DECEMBER – 31, 2021

தேசியச் செய்திகள்

நாகாலாந்தில் ஆயுதப் படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை நீக்குவது குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு

  • நாகாலாந்தில் விதிக்கப்பட்டுய்ய ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை ஆய்வு செய்வதற்கு “5 பேர் கொண்ட“ குழு ஒன்றை அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • விவேக் ஜோஷி இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.
  • ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் எனும் சட்டமானது, எவ்விதமான ஒரு முன்கூட்டிய பிடியாணை எதுவுமின்றி, எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், எவரையும் கைது செய்யவும் வேண்டி பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரமளிக்கிறது.

கிராம் உஜாலா திட்டம்

  • அரசிற்குச் சொந்தமான கன்வெர்ஜன்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனமானது 50 லட்சம் LED பல்புகளை (மின் விளக்குகளை) விநியோகித்து ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
  • இந்தச் சாதனையானது கிராம் உஜாலா என்ற திட்டத்தின் கீ்ழ் அடையப்பட்டது.
  • கிராம் உஜாலா எனும் திட்டமானது தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள கிராமப்புற வீடுகளில் அமல்படுத்தப் படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையில் இத்திட்டம் செயலில் இருக்கும்.

சர்வதேசச் செய்திகள்

இறைச்சிகளுக்கு முப்பரிமாண அச்சிடுதலுடன் கூடிய புதிய மாற்றுகள்

  • இஸ்ரேலிய நாட்டின் ஒரு உணவுத் தொழில்நுட்ப நிறுவனமான சேவர்ஈட் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனி விருப்ப மயமாக்கப்பட்ட தாவர உணவு வகை சார்ந்த பர்கர் வகை உணவை வெளியிட்டள்ளது.
  • உணவைச் சமைப்பதற்கு முப்பரிமாண அச்சிடல் முறையைப் பயன்படுத்திய முதல் நிறுவனங்களுள் ஒன்றாக சேவர்ஈட் மாறியுள்ளது.
  • இந்த தொழில்நுட்பத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு பர்கரிலும் எவ்வளவு கொழுப்பு மற்றும் எவ்வளவு புரதம் இருக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்யலாம்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the star.