Current Affairs in Tamil – May-3, 2021

Current Affairs in Tamil – May-3, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

மே – 3, 2021

தேசியச் செய்திகள்

கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவி எண்

  • பெண்களுக்கான தேசிய ஆணையமானது சமீபத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கான கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) உதவி எண் 9354954224 எண்ணினை வெளியிட்டுள்ளது.
  • இந்த எண்ணிற்கு குறுஞ்செய்தி மட்டுமே அனுப்ப முடியும்
  • இந்த எண் நாடு முழுவதுமுள்ள மகப்பேறு நிலையில் உள்ள தாய்மார்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக நாள் முழுவதும் செயல்படும் வகையிலானதாகும்.

கோவிட்-19 மாதிரிகளைச் சேகரிக்கும் புதிய தொழில்நுட்பம்

  • செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குநரான ராகேஷ் மிஷ்ரா, கோவிட்-19 மாதிரிகளைச் சேகரிப்பதற்கான ஒரு புதிய உலர்ந்த ஸ்வாப் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார்.
  • நோய்க்கிருமியை ஒரு ஊடகம் மூலம் எடுத்துச் செல்லும் முறையில் வைரஸ் மேலும் பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.
  • உலர்ந்த ஸ்வாப் மூலம் மாதிரி சேகரித்தல் முறையானது பாதுகாப்பான, விரைவான, மலிவான மற்றும் மிகவும் துல்லியமான முறையாகும்.

சர்வதேசச் செய்திகள்

உலகளாவிய மின்சார வாகனக் கண்ணோட்ட அறிக்கை

  • சர்வதேச எரிசக்தி முகமையானது சமீபத்தில் உலகளாவிய மின்சார வாகனக் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்டது.
  • இதன்படி 2020-ஆம் ஆண்டில் 3 மில்லியன் புதிய மின்சார கார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது 2019-ஆண்டில் பதிவானதைவிட 41% அதிகமாகும்.
  • 2030-ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள கார்களில் 30% கார்கள் மின்சார கார்களாக இருக்கும்.

பொருளாதாரம்

உலகின் பழமையான நீர்

  • பார்பரா சேர்வுட் லோல்லர் எனும் புவிசார் வேதியியலாளர் உலகின் ஆழமான சில சுரங்கங்களில் சுற்றித் திரிந்து பல மில்லியன் ஆண்டுகள் காலத்திய பழமையான நீதினைக் கண்டறிந்து அதனைப் பிரித்தெடுப்பதிலேயே தனது பெரும்பாலான வாழ்வைக் கழித்தார்.
  • நேச்சர் கம்யூனிகேசன் எனும் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் 2009-ஆம் ஆண்டில் கனடாவின் ஒரு சுரங்கத்திலிருந்து அவர் பிரித்தெடுத்த நீர் 1.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

சர்வதேச உழைப்பாளர்கள் தினம் – மே 1

  • மே தினமானது சர்வதேச உழைப்பாளர்கள் தினம் அல்லது தொழிலாளர் தினம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இத்தினமானது தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்தையும் அர்ப்பணிப்பையும் ஈடுபாட்டினையும் கொண்டாடுவதோடு, பெரம்பாலான நாடுகளில் இத்தினமானது வருடாந்திரப் பொது விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் முதல் உழைப்பாளர் தினமானது 1923-ஆம் ஆண்டில் சிங்காரவேலு செட்டியினரால் ஆரம்பிக்கப்பட்ட லேபர் கிசான் கட்சியினால் சென்னையில் கடைபிடிக்கப்பட்டது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the Star.