Current Affairs in Tamil – May-2, 2021

Current Affairs in Tamil – May-2, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

மே – 2, 2021

தமிழ்நாடு

காவல் கரங்கள்

  • சென்னையில் “காவல் கரங்கள்“ என்ற புதிய ஒருங்கிணைந்த திட்டத்தை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் துவக்கி வைத்தார்
  • சாலைகளில் ஆதரவின்றி தவிக்கும் முதியோர், பெண்கள், சிறுவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யும் வகையில் காவல் கரங்கள் என்ற புதிய திட்டத்தை சென்னைப் பெருநகர காவல்துறை தொடங்கி உள்ளது.

முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட வீடு

  • முப்பரிமாண அச்சிடல் முறை என்பது டிஜிட்டல் வழிகாட்டுதல்கள் மூலம் முப்பரிமாணப் பொருட்களை உருவாக்கும் ஒரு செயல்முறை
  • மத்திய நிதி அமைச்சா நிர்மலா சீதாராமன் அவர்கள் சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்ததில் அமைக்கபட்டுள்ள முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட முதல் வீட்டினைத் திறந்து வைத்தார்
  • இது முப்பரிமாண அச்சிடல் (3D Printed) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெறும் 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.
  • சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவருடைய கோட்பாட்டின் அடிப்படையில் “TVASTA Manufacturing Solutions’ எனும் நிறுவனத்தினால் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது.

சர்வதேசச் செய்திகள்

உலக இராணுவச் செலவினங்களின் போக்கு – அறிக்கை

  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனமானது சமீபத்தில் தனது ”உலக இராணுவச் செலவினங்களின் போக்கு” என்ற அறிக்கையின வெளியிட்டது.
  • இந்த அறிக்கையின்படி உலகிலேயே அதிகளவில் இராணுவச் செலவினங்களை மேற்கொள்ளும் நாடுகள் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகியனவாகும்.
  • இந்தியாவின் இராணுவச் செலவினம் 2.1 சதவீதமும், சீனாவின் இராணுவச் செலவினம் 1.9 சதவீதமும், மற்றும் அமெரிக்காவின் இராணுவச் செலவினம் 4.4 சதவீதமும் அதிகரித்துள்ளது.

2021-ஆம் ஆண்டு டைம் இதழின் பட்டியல்

  • ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ இயங்குதளங்கள் மற்றும் மின்னணு வழியில் கற்றுலுக்கான புத்தாக்க நிறுவனமான பைஜுஸ் ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்கள் டைம் இதழ் முதல் முறையாக வெளியிடும் 100 செல்வாக்கு மிக்க நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
  • “Disruptors” என்ற பிரிவில் டெஸ்லா, ஹீவாவே, சாப்பிஃபை எர்பிஎன்பி மற்றும் டிடி சூசிங் ஆகியவற்றுடன் பைஜீசும் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • புத்தாக்க நிறுவனங்கள் பிரிவில் சூம், அடிடாஸ், டிக்டாக், ஐகியா, மோடேர்னா மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகியவற்றுடன் ஜியோ இயங்குதளமும் பட்டியலிடப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

பைத்தான் 5

  • வானிலிருந்தபடியே வானிலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் பைத்தான்-5 எனப்படும் ஒரு ஏவுகணையானது இலகுரகப் போர் விமானமான தேஜாசுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது.
  • இந்த ஏவுகணைகள் கோவாவில் சோதனை செய்யப்பட்டு, அதில் இந்த ஏவுகணைகளை் 100% இலக்குகளைத் தாக்கி அழித்தன.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the Heart.