Current Affairs in Tamil – July-27, 2021

Current Affairs in Tamil – July-27, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஜூலை – 27, 2021

தேசியச் செய்திகள்

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் ஒருங்கிணைப்பு அறிக்கை

  • இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் ஒருங்கிணைப்பு 2021 என்று தலைப்பிடப்பட்ட ஒரு அறிக்கையினை நிதி ஆயோக் மற்றும் சர்வதேச எரிசக்தி முகைமை ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன.
  • இந்த அறிக்கையானது கர்நாடகா மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய அரசுகளுடன் மூன்று மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட கருத்தரங்குகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
  • இந்த அறிக்கையின்படி இந்தியாவில் ஆற்றல் அமைப்பானது புதுப்பிக்கதக்க ஆற்றல் வளங்களை ஆக்கப்பூர்வமாக ஒருங்கிணைக்க வல்லது.(2022 ஆம் ஆண்டுக்குள் 175GW மற்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் 450GW).

ARMEX-21

  • பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய இராணுவத்தின் பனிச்சறுக்குப் பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • இப்பயணமானது இமாலய மலைத்தொடர் பகுதிகளில் நடத்தப்பட்டது. ARMEX – 21 எனப்படும் இந்தப் பயணமானது மார்ச் 10 அன்று லடாக்கிலுள்ள காரகோரம் கணவாயில் கொடியசைத்துத் தொடங்கப்பட்டு 119 நாட்களில் 1,660கி.மீ தூரம் கடந்து ஜூலை 06 அன்று உத்தரகாண்ட்டிலுள்ள மலரியில் முடிவடைந்தது.
  • இந்திய நாட்டிலும் இந்திய இராணுவத்திலும் சாகச செயல்முறைகளை ஊக்குவிப்பதற்காக இமாலயப் பகுதியின் மலைத் தொடர்களில் ARMEX – 21 பயணம் மேற்கொள்ளப்பட்டது.

சர்வதேசச் செய்திகள்

உலகின் முதலாவது தூய்மையான அணு உலை

  • சீன அரசின் அறிவியலாளர்கள் குளிரூட்டலுக்கு என்று நீரைப் பயன்படுத்தாத ஒரு சோதனன முறை அணு உலை பற்றியத் திட்டத்தை வெளியிட்டுள்ளனர்.
  • இந்த உலையானது யுரேனியத்திற்கு பதிலாக திரவ தோரியத்தைக் கொண்டு இயங்கும்.
  • இது பயன்பாட்டிலுள்ள அணு உலைகளை விட பாதுகாப்பானதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • இந்த வகை அணு உலைக்கு நீர் தேவைப்படுவதில்லை என்பதால் இதனைப் பாலைவனத்திலும் செயல்படச் செய்ய இயலும். சாங்காய் செயல்முறைசார் இயற்பியல் நிறுவனத்தின் குழுவினர் இந்த முன்மாதிரியை உருவாக்கியுள்ளனர்.

விருதுகள்

மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம்

  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் 49கிலோ எடைப் பிரிவில் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
  • சீனாவை சோ்ந்த சிஹூய் ஹூ என்பவர் தங்கப்பதக்கத்தையும், இந்தோனேசியாவை சேர்ந்த வின்டி கேன்டிகா ஆய்சா என்பவர் வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.

சுமித் நாகல் ஒலிம்பிக்கின் ஒற்றையர் பிரிவு

  • ஒலிம்பிக் போட்டிகளின் ஆண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் வெற்றி பெற்ற மூன்றாவது இந்திய டென்னிஸ் வீரர் எனும் பெருமையை சுமித் நாகல் பெற்றுள்ளார்.

முக்கிய தினம்

கார்கில் விஜய் திவாஸ் – ஜூலை 26

  • இந்த ஆண்டு 22வது கார்கில் விஜய் திவாஸ் தினம் ஆகும்.
  • இந்த நாளானது பாகிஸ்தான் இராணுவத்தால ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மலைப் பகுதிகளை மீட்பதில் இந்திய வீரர்கள் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் ஒரு தினமாகும்.
  • 1999 ஆம் ஆண்டு ஜூலை 26 அன்று கார்கில் போர் ஆனது முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது.
  • இந்தியா பெற்ற வெற்றியின் நினைவாக இந்த தினமானது “கார்கில் விஜய் திவாஸ்“ தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the flag.