Current Affairs in Tamil – August-29, 2021

Current Affairs in Tamil – August-29, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஆகஸ்ட் – 29, 2021

தேசியச் செய்திகள்

“பிட் இந்தியா ஆப்“ சேவை துவக்கம்

  • புதுடில்லி பிட் இந்தியா இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் அதற்கான பிரத்யேக “மொபைல் ஆப்“ சேவையை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்குதர் துவக்கி வைத்தார்.
  • இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் மேஜர் தியான்சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.

ரயில் மதாத் செயலி

  • ரயில் பயணிகளின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க “ரயில் மதாத்“ (Rail MADAD : Mobile Application for Desired Assistance During Travel) என்ற செல்லிடப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மலபார் பயிற்சி

  • மலபார் பயிற்சியானது 1992 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஓர் இருதரப்பு கடற்படைப் பயிற்சியாகத் தொடங்கப்பட்டது.
  • நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை அமைப்பின் (அல்லது குவாட்) நான்கு உறுப்பினர் நாடுகளுடைய (இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா) கடற்படைகள் 25வது மலபார் பங்கேற்கின்றன.

இந்தியா மற்றம் பிலிப்பைன்ஸ்

  • இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தென்சீனக் கடலில் சமீபத்தில் ஒரு கடற்படைப் பயிற்சியை மேற்கொண்டன.
  • இந்தியக் கடற்படையானது ஐ.என்.எஸ். ரன்விஜய் என்ற ஏவுகணை தாக்குதல் கப்பலையும் ஐ.என்.எஸ் கோரா என்ற வழிகாட்டப்பட்ட ஏவுகணை போர்க்கப்பலையும் இப்பயிற்சியில் ஈடுபடுத்தியது.
  • பிலிப்பைன்ஸ் கடற்படையானது BRP அன்டோனியோ லூனா எனப்படும் ஒரு பீரங்கிக் கப்பலினை இப்பயிற்சியில் ஈடுபடுத்தியது.

மாலே இணைப்புத் திட்டம்

  • மாலத்தீவு அரசானது மாலே இணைப்புத் திட்டத்தைக் கட்டமைப்பதற்கக AFCONS எனப்படும் ஒரு மும்பை நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • இதில் வில்லிங்லி, குல்ஹிஃபல்ஹீ மற்றும் திலாஃபுசி போன்ற அண்டைத் தீவுகளுடன் மாலத்தீவின் தலைநகர் மாலேயை இணைக்கும் கரைப்பால இணைப்பு மற்றும் 6.74கி.மீ பாலமானது கட்டமைக்கப்படும்.

விளையாட்டுச் செய்திகள்

பாராலிம்பிக் – வட்டு எறிதல்

  • வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா வெள்ளி வென்றார்.
  • வட்டு எறிதலில் வினோத் குமார் வெண்கலம் வென்று 3வது இடத்தை பிடித்துள்ளார்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the Key.