Current Affairs in Tamil – April-29, 2021

Current Affairs in Tamil – April-29, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஏப்ரல் – 29, 2021

தேசியச் செய்திகள்

உலகளாவிய ஆற்றல் ஆய்வு அறிக்கை

  • சர்வதேச எரிசக்தி முகமையானது (International Energy Agency – IEA) சமீபத்தில் உலகளாவிய ஆற்றல் ஆய்வு அறிக்கையினை வெளியிட்டது.

இந்தியாவில்

  • 2019-ம் ஆண்டில் பதிவானதை விட இந்த ஆண்டில் கார்டன்-டை-ஆக்சைடு வெளியீடு 1.4% அதிகமாக உள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • புதுப்பிக்கக் கூடிய ஆற்றலிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆற்றலின் அதிகரிப்பினை விட நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட இருக்கின்றது.
  • பாரீஸ் உடன்படிக்கையின்கீழ் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் கார்பன் வெளியீட்டின் தீவிரத்தை 33% என்ற அளவிலிருந்து 35% வரை குறைப்பதற்கு இந்தியா உறுதி மேற்கொண்டுள்ளது.
  • தற்போது, இந்தியாவின் கார்பன்-டை-ஆக்சைடின் வெளியீடு உலகளாவியச் சராசரியை விட 60% என்ற அளவிற்குக் குறைவாகவே உள்ளது.

பொருளாதாரச் செய்திகள்

ஏஸ் மணி நியோ வங்கி

  • ஏஸ்வேர் பின்டெக் சர்வீசஸ் (fintech Services Company) எனப்படும் நிதித் தொழில்நுட்ப சேவை நிறுவனம் ஏஸ் மணி நியோ வங்கி (Ace Money Neobank) எனப்படும் கேரளாவின் முதல் நியோ வங்கியை தொடங்கியுள்ளது.
  • இதற்காக அந்நிறுவனம் YES வங்கி மற்றும் ICICI வங்கியுடன் இணைந்திருக்கின்றது.
  • ஏஸ்வேர் என்பது கேரளாவினை மையமாகக் கொண்ட ஒரு நிதித் தொழில்நுட்ப சேவை நிறுவனம்.
  • ஏஸ் மணி வங்கியின் சேவைகள் கேரளாவின் அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் வழங்கப்படும்.

நியோ வங்கிகள்

  • இவை ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்திருக்கும் வழக்கமான வங்கிகளை போல் அல்லாது முழுவதுமாக இணையவழியில் செயல்படும் ஒரு வகையான டிஜிட்டல் வங்கியாகும்.
  • Chqbook (Chqbook.com) என்பது மளிகைக் கடைகள், வணிகர்கள், வேதியியலாளர்கள் மற்றும் மற்ற உரிமையாளர்கள் போன்ற சிறிய வணிக உரிமையாளர்களுக்கான இந்தியாவின் முதல் நியோ வங்கியாகும்.
  • Fampay என்பது பதின்ம வயதினருக்கான இந்தியாவின் முதல் நியோ வங்கியாகும்.
  • Finin என்பது நுகர்வோருக்காக முழு அளவில் இயங்கும் இந்தியாவின் முதல் நியோ வங்கியாகும்.

சுற்றுச்சூழல் செய்திகள்

இரண்டாவது உலகப் பெருங்கடல் மதிப்பீட்டு அறிக்கை

  • ஐக்கிய நாடுகள் சமீபத்தில் இரண்டாவது உலகப் பெருங்கடல் மதிப்பீட்டு அறிக்கையினை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையானது உலகம் முழுவதிலிருந்தும் ஐக்கிய நாடுகளின் உறுப்பினர் நாடுகளால் நியமிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அறிவியலாளர்களின் உழைப்பாகும்.
  • இந்த அறிக்கை 2015-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் உலகப் பெருங்கடல் மதிப்பீட்டு அறிக்கையின் தொடர்ச்சி ஆகும்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the Truck.