Monthly Current Affairs Tamil – OCTOBER-19, 2021

Monthly Current Affairs Tamil – OCTOBER-19, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

அக்டோபர் – 19, 2021

தமிழ்நாடு செய்திகள்

கோயில் நகைகளைத் தங்கக் கட்டிகளாக மாற்றுதல்

  • இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஆலயங்களின் தங்க நகைகளை உருக்குவதற்கான ஆரம்ப வேலைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • இந்த ஆலயங்களின் தங்க நகைகள் உருக்கப்பட்டு தங்கக்கட்டிகளாக மாற்றப்படும்.

தேசியச் செய்திகள்

பருவநிலை நெகிழ்திறன் தகவல் அமைப்பு மற்றும் திட்டமிடல் கருவி

  • மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், பருவநிலை நெகிழ்திறன் தகவல் அமைப்பு மற்றும் திட்டமிடல் என்ற கருவியினை வெளியிட்டார்.
  • இந்தக் கருவியானது MGNREGA திட்டத்தின் கீழ் புவியிடத் தகவல் அமைப்பு சார்ந்த நீர்நிலை திட்டமிடலில் பருவநிலை குறித்த தகவல்களை ஒருங்கிணைப்பதற்காக வேண்டி வெளியிடப்பட்டது.

மாநிலச் செய்திகள்

வேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் நிதி வழங்கும் அலகுகள்-உத்தரப் பிரதேசம் முதலிடம்

  • பிரதான் மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் நாட்டின் அதிகளவிலான அலகுகளுக்கு உத்தரப் பிரதேசம் நிதி வழங்கியுள்ளது.
  • உத்தரப் பிரதேச அரசானது உச்சவரம்பு தொகையாக மொத்தம்
    ரூ. 123 கோடிக்கும் மேல் நிதி வழங்கியுள்ளது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the house.