Monthly Current Affairs Tamil – OCTOBER-13, 2021

Monthly Current Affairs Tamil – OCTOBER-13, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

அக்டோபர் – 13, 2021

தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம்

  • தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக ஐசரி கணேஷ் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
  • அவர் வேல்ஸ் குழும நிறுவனங்களின் தலைவராவர்.
  • அவர் இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

கடற்பாசிப் பூங்கா

  • இந்தியாவில் முதல் பல்நோக்கு கடற்பாசிப் பூங்காவானது தமிழ்நாட்டில் நிறுவப்படும்.
  • உலகில் கடல் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
  • செல்வகணபதி புதுச்சேரியின் முதல் பாஜக எம்.பி.ஆனார்.

தேசியச் செய்திகள்

மலபார் பயிற்சி 2021

  • பலதரப்பு மலபார் கடற்படைப் பயிற்சியின் முதல் கட்டமானது பிலிப்பைன்ஸ் கடலில் 2021 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 26 முதல் 29 வரை நடைபெற்றது.
  • மலபார் பயிற்சியானது 1992 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஆண்டுதோறும் நடக்கக் கூடிய ஒரு இருதரப்பு கடற்படைப் பயிற்சியாக தொடங்கியது.

மாநிலச் செய்திகள்

நீர் மின் திட்டங்கள்

  • திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குழ ஆற்றுப் படுகையில் முன்மொழியப்பட்ட 163 மெகா வாட் அதிரப்பள்ளி நீர் மின் திட்டத்தை கேரள அரசு ரத்து செய்துள்ளது.
  • தமிழ்நாட்டின் ஆனைமலைப் பகுதியில் உருவாகிற சாலக்குடி ஆறு என்பது ரெியார் ஆற்றின் துணை நதியாகும்.
  • சாலக்குடி ஆற்றுப் படுகையில் பல்வேறு நீர் மின் திட்டங்கள் தொடங்கப்பட்டதால் காடர் பழங்குடிச் சமூகத்தினர் தொடர்ந்து இடப்பெயர்வை எதிர்கொண்டனர்.

நாடு முழுவதும் ஆற்று மீன்கள் வளர்ப்புத் திட்டம்

  • இது ‘பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY –Pradhan Mantri Matsya Sampada Yojana) என்ற திட்டத்தின் கீழ் ஒரு சிறப்பு நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ஹைதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியமானது இதற்கு ஒரு தலைமை அமைப்பாகும்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the car.