Daily Current Affairs Tamil – November-14, 2021

Daily Current Affairs Tamil – November-14, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

நவம்பர் – 14, 2021

தமிழ்நாடு செய்திகள்

தேவசகாயம் பிள்ளை (1712 – 1752)

  • இவர் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்கச் சமயத்திற்கு மாறிய, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு தியாகி ஆவார்.
  • இவர் 1712 ஆம் ஆண்டில் நீலகண்டப் பிள்ளை என்ற பெயருடன் பிறந்தார்.
  • இவர் 1745 ஆம் ஆண்டில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பிறகு ”லாசாரஸ்” என்ற ஒரு பெயரைப் பெற்றார்.
  • உள்ளுர் மொழியில் ”லாசாரஸ்” அல்லது ”தேவசகாயம்” என்பதன் பொருள் ”கடவுளே என் உதவி” என்பதாகும்.
  • இவர் 2022 ஆம் ஆண்டு மே 05 ஆம் தேதியன்று வாட்டிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா எனும் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் அவர்களால் புனிதராக அறிவிக்கப்பட உள்ளார்.
  • திருச்சபையில் அங்கம் வகிக்காத, புனிதர் பட்டம் பெறும் முதல் இந்தியப் பாமரர் என்றப் பெருமையை இவர் பெறுவார்.
  • இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் புனிதத் துறவி ஆவார்.

தேசியச் செய்திகள்

ஆயுஷ்மான் பாரத் – டிஜிட்டல் திட்டம்

  • மத்திய சுகாதார அமைச்சகமானது, சுகாதார ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கம் செய்வதற்காக அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து மருந்துவர்கள் குறித்தத் தகவல்களையும் ஆயுஷ்மான் பாரத்-டிஜிட்டல் திட்டத்தின் கீழ் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யத் தொடங்கியுள்ளது.
  • இந்த முயற்சியின் கீழ், மருத்துவமனைத் தகவல் மேலாண்மை அமைப்பு மீதான மென்பொருள் என்ற ஒன்றை வாங்குமாறு அனைத்து அரசு மருத்துவமனைகளிடம் கூறப்பட்டு உள்ளது.
  • இதன் மூலம், குடிமக்கள் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் சுகாதார வசதிகளைப் பெற இயலும்.

ஸ்ரீராமாயண யாத்ரா சிறப்பு இரயில்

  • இந்திய இரயில்வே சமையல் மற்றும் சுற்றுலாக் கழகமானது ஸ்ரீராமாயண யாத்ரா என்ற சிறப்பு இரயிலின் முதல் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது சமயம் சார்ந்த சுற்றுலாவையும் மத்திய அரசின் ”தேக்கோ அப்னா தேஷ்“ என்ற முன்னெடுப்பினையும் மேம்படுத்துவதற்காக தொடங்கப் பட்டது.
  • இது ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கிய இடங்களுக்குப் பயணிக்கும்.

சர்வதேசச் செய்திகள்

FW டி கிளர்க்

  • இவர் தென் ஆப்பிரிக்காவின் கடைசி வெள்ளையினத் தலைவர் ஆவார்.
  • 1990 ஆம் ஆண்டில் நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று FW டி கிளர்க் தான் அறிவித்தார்.
  • 1993 ஆம் ஆண்டில் FW டி கிளர்க் மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு நோபல் பரிசானது வழங்கப்பட்டது.
  • இவர் வெள்ளையினச் சிறுபான்மையினர் ஆட்சிக் காலத்தில் இருந்த கடைசி அதிபர் ஆவார்.
  • கிளர்க்கின் அரசானது தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி முறையை ஒழித்து மக்களாட்சியை அறிமுகப்படுத்தியது.
  • இவரையடுத்து 1993 ஆம் ஆண்டில் நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பதவியேற்றார்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the cup.