Daily Current Affairs Tamil – NOVEMBER-18, 2021

Daily Current Affairs Tamil – NOVEMBER-18, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

நவம்பர் – 18, 2021

தமிழ்நாடு செய்திகள்

வலிமை சிமெண்ட்

  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ”வலிமை” சிமென்ட் என்ற தயாரிப்பினை வெளியிட்டார்.
  • வலிமை சிமென்ட் தயாரிப்பின் இரண்டு ரகங்களின் விலையானது ரூ.350 மற்றும் ரூ. 365 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசியச் செய்திகள்

இந்தியாவின் சூரியசக்தி செயல்திறன் – 45 GW

  • கடந்த ஏழு ஆண்டுகளில் தனது சூரியசக்தி செயல்திறன் ஆனது 17 மடங்கு அதிகரித்து உள்ள நிலையில் இந்தியாவின் சூரியசக்தி செயல்திறன் சுமார் 45 ஜிகர் வாட்டாக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை உச்சி மாநாட்டில் இந்தியா தெரிவித்துள்ளது.
  • இந்திய நாடு உலக மக்கள் தொகையில் 17 சதவீதத்தைக் கொண்டுள்ளது என்பதையும் அதன் வரலாற்று ரீதியான ஒட்டுமொத்த உமிழ்வுகளில் 4 சதவீதம் மட்டுமே இந்தியாவின் பங்கு என்பதையும் இந்தியா உணர்த்தியுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்தக் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் 15 சதவிகிதமானது வளிமண்டலத்தில் இருந்து LULUCF (Land use, Land – Use Change and Forestry – நிலப் பயன்பாட்டு மாற்றம் மற்றும் வனவியல்) மூலம் அகற்றப் பட்டது.

ஒருங்கிணைந்த உயிரிச் சுத்திகரிப்பு ஆலைகள் – COP 26

  • ‘மிஷன் இன்னோவேஷன்’ என்ற திட்டத்துடன் இணைந்து, இந்தியா ஒருங்கிணைந்த உயிரிச் சுத்திகரிப்பு ஆலைகள் என்ற ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
  • ஒருங்கிணைந்த உயிரிச் சுத்திகரிப்பு ஆலைகள் குறித்த திட்டத்தினை இந்தியா மற்றும் நெதர்லாந்து இணைந்து செயல்படுத்தும்.
  • புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான எரிபொருள்கள், இரசாயனங்கள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றிற்குப் பதிலாக உயிரி சார்ந்த மாற்று எரிபொருள்களின் பயன்பாட்டைக் கொண்டு வருவதில் இந்த திட்டமானது ஈடுபாடு செலுத்தும்.

நோரோ வைரஸ்

  • கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் முதலாவது நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டது.
  • நோரோ வைரஸ் என்பது விலங்குகளால் பரவும் ஒரு நோய் ஆகும்.
  • இது அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலம் பரவுகிறது.
  • நோரோ வைரஸ் என்பது இரைப்பைக் குடல் நோயை (gastrointestinal illness) ஏற்படுத்தும் வைரஸ்களின் குழுவினைச் சேர்ந்ததாகும்.

பூர்வாஞ்சல் விரைவுவழிச் சாலை

  • உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 341 கிமீ நீளமான பூர்வாஞ்சல் விரைவு வழிச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • இந்த விரைவுவழிச் சாலையானது 6 வழிச்சாலையைக் கொண்டுள்ளதோடு, எதிர் காலத்தில் இது 8 வழிச்சாலையாகவும் விரிவுபடுத்தப்படும்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the truck.