Daily Current Affairs Tamil – DECEMBER-20, 2021

Daily Current Affairs Tamil – DECEMBER-20, 2021

CURRENT AFFAIRS – 2021

DECEMBER – 20, 2021

தேசியச் செய்திகள்

8வது இந்தியப் பெருங்கடல் பேச்சுவார்த்தை

  • 8வது இந்தியப் பெருங்கடல் பேச்சுவார்த்தையானது சமீபத்தில் நடத்தப் பட்டது.
  • இந்தப் பேச்சுவார்த்தையானது வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் இந்திய உலக விவகாரங்கள் சபை ஆகியவற்றால் இணைந்து நடத்தப்பட்டது.
  • இந்தியப் பெருங்கடலோர நாடுகள் சங்கம் என்பது இந்தியப் பெருங்கடலுடன் தங்களது எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் 23 நாடுகளை உள்ளடக்கிய ஒரு சர்வதேசஅமைப்பாகும்.

SANT ஏவுகணை

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய விமானப் படையானது பொக்ரான் ரகத்தைச் சேர்ந்த, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப் பட்ட ஒரு நெடுந்தூர பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையினை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
  • SANT வகை ஏவுகணைகளானது 10 கி.மீ. தூரம் வரையிலான இலக்குகளையும் எதிர்க்க வல்லது.
  • ஆயுதப் படைகளுக்கான SANT ஏவுகணையானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இதர ஆய்வகங்கள் மற்றும் இதரத் தொழில்துறைகளுடன் இணைந்து ஹைதராபாத்திலுள்ள இமாரத் ஆராய்ச்சி மையத்தினால் வடிவமைக்கப் பட்டு உருவாக்கப்பட்டது.

குழந்தைகளுக்கான கோவோவாக்ஸ் தடுப்பூசி

  • உலக சுகாதார அமைப்பானது குழந்தைகளுக்கான கோவோவாக்ஸ் தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியது.
  • அவசரகாலப் பயன்பாட்டிற்கான 9வது கோவிட்-19 தொற்றிற்கான ஒரு தடுப்பூசியாக கோவோவாக்ஸ் மருந்தினை உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது.
  • இந்த மருந்தானது 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு தவணைகளில் வழங்கப் படுகிறது.

விளையாட்டுச் செய்திகள்

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்சிப்

  • உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்சிப் போட்டிகளில் ஆடவருக்கான 81 கி.கி. எடைப் பிரிவில் வெற்றிப் பெற்றதன் மூலம் அஜய் சிங் இந்தியாவிற்கான 3 வது தங்கப்பதக்கத்தை வென்றார்.
  • மேலும் அஜய் சிங் மொத்தம் 322 கி.கி. எடையைத் தூக்கி, ஸ்நாட்ச் பிரிவில் ( 147 கி.கி) ஒரு தேசியச் சாதனையையும் படைத்தார்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the plane.