Daily Current Affairs Tamil – DECEMBER-19, 2021

Daily Current Affairs Tamil – DECEMBER-19, 2021

CURRENT AFFAIRS – 2021

DECEMBER – 19, 2021

தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு மாநிலப் பாடல்

  • தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலைத் தமிழ்நாட்டின் மாநிலப் பாடலாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • இப்பாடல் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பாடப் படும் போது மாற்றுத் திறனாளிகள் தவிர அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்.

தேசியச் செய்திகள்

அனைத்திந்திய மாநகராட்சித் தலைவர் மாநாடு

  • வாரணாசியில் நடைபெற உள்ள அனைத்திந்திய மாநகராட்சித் தலைவர் மாநாட்டினை (All-India Mayor’s Conference) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.
  • உத்தரப் பிரதேசத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையானது இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது.
  • 100 நகரங்களுக்கும் மேற்பட்ட நகரங்களின் மாநகராட்சித் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயது

  • பெண்களின் திருமண வயதை 18 வயதிலிருந்து 21 வயதாக உயர்த்துவதற்கான ஒரு முன்மொழிதலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • தற்போது ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும் உள்ளது.
  • இதனை நடைமுறைப் படுத்துவதற்காக வேண்டி குழந்தை திருமண தடைச் சட்டம் 2006, சிறப்புத் திருமணச் சட்டம் 1954 மற்றும் இந்து திருமணச் சட்டம் 1955 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

இயற்கை விவசாயம் மீதான தேசிய மாநாடு

  • இயற்கை விவசாயம் மீதான தேசிய மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார்.
  • இந்த மாநாட்டில் விவசாயிகள் மத்தியில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவது பற்றியும் இதன் நன்மைகள் பற்றிய தகவல்கள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.
  • 3 நாட்கள் அளவிலான இந்த மாநாடு குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தினல் நடத்தப் படுகிறது.

சர்வதேசச் செய்திகள்

இரண்டாம் கிம் ஜாங்கின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம்

  • 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 முதல் 11 நாட்களுக்கு தனது குடிமக்கள் சிரிப்பதற்கும், மது அருந்துவதற்கும், மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கும் வட கொரிய அரசு தடை விதித்துள்ளது.
  • வடகொரிய அரசு அதிகாரிகள் தமது குடிமக்களுக்கு மகிழ்ச்சியின் அறிகுறிகளை எதுவும் வெளிப்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ளனர்.
  • முன்னாள் தலைவர் இரண்டாம் கிம் ஜாங்கின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தின் ஒரு அங்கமாக இந்த உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the car.