Current Affairs in Tamil – July-24, 2021

Current Affairs in Tamil – July-24, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஜூலை – 24, 2021

தமிழ்நாடு செய்திகள்

நீதிபதி முருகேசன் குழு

  • இக்குழுவானது தமிழக முதலதைச்சரிடம் தனது அறிக்தகதயச் சமர்ப்பித்துள்ளது.
  • இக்குழு ஜுன் 15 அன்று அதைக்கப்பட்டது.
  • தொழில்நுட்பப் பாடப்பிரிவுகளில் அரசுப் பள்ளி மாணாக்கர்களின் சேர்க்கை குறித்த ஆய்வினை இக்குழுவானது மேற்கொண்டது.
  • எதனால் சுமார் 2% குறைவான அரசுப் பள்ளி மாணாக்கர்கள் மட்டுமே அண்ணா பல்கலைக்கழகத்திலும்10% குறைவான மாணாக்கர்கள் மட்டுமே மாநில அரசின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளிலும் சேர்க்கப்படுகின்றனர் என்பது குறித்து இந்த அறிக்கையில் விவாதிக்கப்பட்டுள்ளது.
  • அரசுக் கல்லலூரிகளில் தொழில்முறைப் பாடப்பிரிவுகளுக்கான (மருத்துவக் கல்வி தவிர) இட ஒதுக்கீட்டில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென இக்குழு பரிந்துரைத்துள்ளது.

நிலைப்படுத்தப்பட்ட தொலைக் கட்டுப்பாட்டுத் துப்பாக்கி

  • திருச்சிராப்பள்ளியின் ஆயுதத் தொழிற்சாலையானது இந்தியக் கடற்படையில் 12.7 மி.மீ M2 NATO என்ற வகையிலான நிலைப்படுதப்பட்ட 15 தொலைக்கட்டுப்பாட்டுத் துப்பாக்கிகளையும் இந்தியக் கடலோர காவற்படையிடம் அது போன்ற 10 துப்பாக்கிகளையும் வழங்கியுள்ளது.
  • இவை இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் எனும் ஒரு நிறுவனத்துடனான தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் தயாரிக்கப் பட்டவையாகும்.

தேசியச் செய்திகள்

97வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து உச்ச நீதிமன்றம்

  • குஜராத் உயர்நீதிமன்றத்தின் 2013 ஆம் ஆண்டின் தீர்ப்பை ஆதரிக்கும் வகையில் 97வது அரசியலமைப்புத் திருத்தத்தின் சில விதிகளை உச்ச நீதிமன்றம் நீக்கி உள்ளது.
  • கூட்டுறவுச் சங்கங்கள் மாநிலப் பட்டியலில் இருப்பதால், அவை தொடர்பாக நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • திருத்தமானது கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகத்தில் சீரான தன்மையைக் கொண்டு வருவதற்காக இந்தத் திருத்தம் இயற்றப்பட்டதாகவும் அது மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கவில்லை என்றும் மத்திய அரசு கூறியது.
  • ஆனால் மத்திய அரசானது இந்த விவகாரத்தில் சீரான தன்மையை அடைய விரும்பினால் அரசியலமைப்பின் 252வது சட்டப் பிரிவின் கீழ் இதை அணுகுவதே ஒரு சிறந்த வழியாகும்.

சர்வதேச செய்திகள்

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்கள் – பட்டியலில் இருந்து நீக்கம்

  • ஐக்கியப் பேரரசின் விவர்பூல் நகரமானது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
  • அதன் கடல் சார்ந்த வரலாற்றை அங்கீகரிக்கும் வகையில் அதற்கு 2004 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளம் என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

தானியங்கு செவித்திறன் மூளைத்தண்டு உணர்வு அமைப்பு

  • புதிதாக பிறந்த மற்றும் சிறு வயது குழந்தைகளுக்கு ஏற்படும் கேட்கும் திறன் இழப்பை சரி செய்வதற்காக வேண்டி பஞசாப் அரசானது இந்த அமைப்பைத் தொடங்கி உள்ளது.
  • நாட்டில் இது போன்ற அமைப்பைத் தொடங்கிய முதல் மாநிலம் இதுவே ஆகும்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the car.