Current Affairs in Tamil – February-21, 2021

Current Affairs in Tamil – February-21, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

பிப்ரவரி – 21, 2021

தமிழ்நாடு செய்திகள்

கொத்தடிமை முறை ஒழிப்பு தினம்

  • தமிழ்நாடு மாநில அரசானது பிப்ரவரி 09-ஆம் தேதியை கொத்தடிமை முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
  • மத்திய அரசானது 1976-ஆம் ஆண்டு பிப்ரவரி 09 அன்று கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டதைக் கொண்டு வந்தது.

தேசியச் செய்திகள்

இந்திய சைகை மொழி அகராதி

  • மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது இந்திய சைகை மொழி (Indian Sign Language – ISL) அகராதியன் மூன்றாவது பதிப்பை வெளியிட்டுள்ளது.
  • இந்தப் புதிய பதிப்பானது தினசரி உபயோகப்படும் 10,000 சொற்கூறுகளைக் கொண்டிருக்கும்.
  • இதன் முதலாவது பதிப்பு 3000 சொற் கூறுகளுடன் 2018-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

சர்வதேசச் செய்திகள்

உலக கோவிட் – 19 தடுப்பூசித் திட்டம்

  • ஐக்கிய நாடுகள் அமைப்பானது ”உலக கோவிட்-19 தடுப்பூசித் திட்டம்” ஒன்றைத் தயாரிக்குமாறு ஜி20 நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் எனும் திட்டமானது ஏழை நாடுகளுக்கு 40 மில்லயன் என்ற அளவில் கொரானா வைரஸ் தடுப்பூசிக்காக ஃபிசர்-பயோன்டெக் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

உலக சூரிய ஒளி வங்கி

  • சர்வதேச சூரிய ஒளிக் கூட்டமைப்பானது கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றக் கருத்தரங்கில் உலக சூரிய ஒளி வங்கியை (World Solar Bank – WSB) தொடங்க முடிவு செய்துள்ளது.
  • WSB-ன் தலைமையகமானது இந்தியாவில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
  • WSB-ஆனது அடுத்த 10 ஆண்டுகளில் ISA அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு 50 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை வழங்க முடிவு செய்துள்ளது.

பொருளாதாரச் செய்திகள்

கடன் குறித்த IIF அறிக்கை

  • சர்வதேச நிதியியல் அமையமானது (IIF) உலகக் கடனானது 2020-ஆம் ஆண்டின் முடிவில் 281 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
  • இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 335% அளவிற்கும் அதிகமாகும்.
  • இது 2021-ஆம் ஆண்டு முடிவில் கடன் மதிப்பானது 92 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.

சுற்றுச்சூழல் செய்திகள்

பழமையான டிஎன்ஏ கண்டெடுப்பு

  • விஞ்ஞானிகள் சைபீரியாவைச் சேர்ந்த மாமூத்தின் பற்களிலிருந்து டிஎன்ஏ-வை எடுத்துள்ளனர்.
  • மாமூத்தகள் ஏறத்தாழ சில 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வட கிழக்கு சைபீரியாவில் காணப்பட்டது.
  • மறைந்து போன எலிபண்டைட் என்ற மரபணு உயிரினத்தின் ஒரு இனமாகும்.

மாநிலச் செய்திகள்

KFC கழகத்தின் பற்று அட்டைகள்

  • KFC என்பது அரசால் நிர்வகிக்கப்படும் முன்னணியில் உள்ள ஒரு நிதியியல் நிறுவனம் ஆகும்.
  • இந்த அட்டைகள் ரூபே மற்றும் பிளாட்டினம் அட்டை வடிவங்களில் வெளியிடப்படும்.
  • பற்று அட்டைகளை மாநில அரசின் நிதியில் கழகம் வெளியிடுவது நாட்டில் இதுவே முதல் முறையாகும்.

பிரபலமானவர்கள், மற்றும் விருதுகள்

TIME பத்திரிக்கையின் பட்டியல்

  • TIME பத்திரிக்கையின் ”எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் வளர்ந்து வரும் 100 தலைவர்களை” கொண்ட ஒரு வருடாந்தரப் பட்டியலில் பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திர சேகர் ஆசாத் இடம் பிடித்துள்ளார்.
  • இந்தப் பட்டியலானது ”2021 TIME 100 Next” என்று பெயரிடப்பட்டுள்ளது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the heart.