Current Affairs in Tamil – February-20, 2021

Current Affairs in Tamil – February-20, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

பிப்ரவரி – 20, 2021

தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை திட்டங்கள்

 • ராமநாதபுரம் – தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும் சென்னை மணலியில் சி.பிசி.எல். (சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) வளாகத்தில் கேசோலினில் இருந்து கந்தகத்தை நீக்கும் வளாகத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

தேசியச் செய்திகள்

டிஜிட்டல் நுண்ணறிவுப் பிரிவு

 • UCC (Unsolicited Commercial Communication) மற்றும் நிதி மோசடி வழக்குகள், குறிப்பாக டிஜிட்டல் கொடுப்பனவுகளில் வழங்கப்படும் புகார்களைக் கையாள இது ஒரு முதன்மை அமைப்பாக செயல்படும்.
 • டிஜிட்டல் நுண்ணறிவு பிரிவைத் தவிர, மோசடி நிர்வாகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்கான தொலைத் தொடர்பு தகவல் ஆய்வு அமைப்புகள் 22 உரிமை சேவைப் பிரிவுகள் அளவில் அமைக்கப்படும்.

மகாபாஹீ – பிரம்மபுத்ரா திட்டம்

 • ரோ-பாக்ஸ் கப்பல் நடவடிக்கைகளின் தொடக்கமானது மகாபாஹீ-பிரம்மபுத்ரா திட்டத்தின் துவக்கத்தைக் குறிப்பிடுகிறது.
 • ரோ-பாக்ஸ் கப்பல் நடவடிக்கைகள் நீமதிகாட் & மஜுலி, துப்ரி-ஹட்சிங்கிமாரி மற்றும் வடக்கு-தெற்கு குவஹாத்தி ஆகிய இடங்களுக்கு இடையே தொடங்கப்படும்.

சர்வதேசச் செய்திகள்

எபோலா திடீர்ப் பெருக்கம்

 • கினியாவின் சுகாதார அமைச்சகமானது அந்நாடு எபோலா ”தொற்றுநோய்க்கு” மத்தியில் இருப்பதாக அறிவித்துள்ளது.
 • 2013-16 ஆம் ஆண்டில் வெடித்தத் தொற்றானது பெரும்பாலும் கினியா, சியரா லியோன் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளில் 11,300 பேரைக் கொன்றது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

பைமோ-மின்சார இரு சக்கர வாகனம்

 • பை பீம் என்ற நிறுவனமானது மின்சார இரு சக்கர வாகனத்தை “பைமோ“ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
 • இந்த மின்சார இரு சக்கர வாகனத்தைத் திறன்பேசியை விட வேகமாக மின்னூட்டம் செய்ய முடியும்.

அஸ்ட்ரா மார்க் 2 ஏவுகணை

 • அஸ்ட்ரா மார்க் 2 ஏவுகணையின் சோதனையை இந்தியா விரைவில் தொடங்க உள்ளது.
 • இந்த ஏவுகணை 160 கி.மீ தூரத்திலிருந்து எதிரி விமானங்களை வீழ்த்தும் திறன் கொண்டது.
 • காட்சி வரம்பிற்கு அப்பாற்பட்ட, விண்ணிலிருந்து விண்ணில் இருக்கும் இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான ஒரு ஏவுகணையாகும் (BVRAAM – Beyond visual range missile air-to-air missile)

ஐ.என்.எஸ்

 • இந்தியக் கடற்படை தனது மூன்றாவது ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலை 75-வது திட்டத்தின் கீழ் பெற்றது.
 • மொத்தம் 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியக் கடற்படையில் திட்டம் 75 என்பதின் கீழ் கட்டப்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழல் செய்திகள்

உலகின் மிகச்சிறிய ஊர்வன உயிரினம்

 • உலகின் மிகச்சிறிய ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினமானது மடகாஸ்கரில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
 • பச்சோந்தியின் இனமான இது ப்ரூக்ஸியா நானா என்று அழைக்கப்படுகிறது.
 • இப்பச்சோந்தியின் நீளம் 22 மி.மீ ஆகும், அதாவது மொத்தத்தில் 0.86 அங்குலமாகும்.

மாநிலச் செய்திகள்

கொச்சி நீர் மெட்ரோ திட்டம்

 • கொச்சி நீர் மெட்ரொவின் முதல் பாதை மற்றும் நீர் நிலையங்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்துள்ளார்.
 • இந்தத் திட்டம் அதிநவீன படகுகளின் உதவியுடன் அந்த நகரம் முழுவதும் உள்ள தீவுகளை இணைக்கிறது.

உ.பி.அபுதயா திட்டம்

 • போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்க வேண்டி உ.பி. அபுதயா எனும் ஒரு திட்டத்தை உத்திரப் பிரதேச அரசு தொடங்கியுள்ளது.
 • இதில் JEE, NEET, NDA, CDS மற்றும் UPSC ஆகியவை அடங்கும்.

விருதுகள்

ஆண்டின் ஸ்கோச் முதல்வர்

 • ஆந்திராவின் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு ஆண்டின் ஸ்கோச் முதல்வர் விருது வழங்கப்பட்டுள்ளது (Skoch Chief Minister of the Year award).
 • இந்த விருதுக்கான தேர்வு, பல்வேறு மாநிலங்களில் திட்ட அளவிலான விளைவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் எடுக்கப்பட்டது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

  Please prove you are human by selecting the plane.