Current Affairs in Tamil – August-6, 2021

Current Affairs in Tamil – August-6, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஆகஸ்ட் – 6, 2021

தேசியச் செய்திகள்

”சமக்ரா சிக்சா” திட்டம்.

  • பள்ளிக் கல்விக்கான சமக்ரா சிக்சா திட்டத்தினை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் 2026 ம் ஆண்டு மார்ச் 31 வரை மேலும் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • சமக்ரா சிக்சா திட்டமானது ஆரம்பக் கல்வி முதல் 12ம் வகுப்பு வரையில் முழு பள்ளிக் கல்வியையும் உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த திட்டமாகும்.
  • அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வியைக் கிடைக்கச் செய்தலை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டமானது கல்விக்கான நிலையான மேம்பாட்டு இலக்கின் (4) வழியே உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு செய்திகள்

பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு

  • தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் V.மெய்யநாதன் புதுக்கோட்டையின் பொற்பனைக் கோட்டையில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட உள்ள தொல்லியல் அகழாய்வுகளைத் தொடங்கி வைத்தார்.
  • பல ஆண்டுகளுக்கு முன்பு பொற்பனைக் கோட்டையில் ஒரு கோட்டை இருந்ததாக தகவல்கள் உள்ளன.
  • இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள சான்றுகள் 1800 ஆண்டுகளுக்கு முந்தையவை எனத் தொல்லியலாளர்கள் கூறுகின்றனர்.

விளையாட்டுச் செய்திகள்

பாரா ஒலிம்பிக் கருத்துருப் பாடல் வெளியீடு

  • மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் இந்திய பாரா ஒலிம்பிக் குழுவினருக்கான கருத்துருப் பாடலை புதுடெல்லியில் வெளியிட்டார்.
  • இந்தப் பாடலுக்கு ” கர் தே கமல் தூ ” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை இயக்கிப் பாடியவர் சஞ்சீவ் ஆவார்.
  • இவர் லக்னோவைச் சேர்ந்த திவ்யாங்க் கிரிக்கெட் வீரராவார். டோக்கியோவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட்டுத் துறைகளில் 54 பாரா விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

லாவ்லினா போர்கோஹெய்ன்

  • லாவ்லினா இந்தியாவிற்கு மூன்றாவது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றுள்ளார்.
  • இவர் குத்துச்சண்டை போட்டியில் 2வது பெண் வீராங்கனை ஆவார்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the House.