Current Affairs in Tamil – August-5, 2021

Current Affairs in Tamil – August-5, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஆகஸ்ட் – 5, 2021

தமிழ்நாடுச் செய்திகள்

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு

  • வன்னியர் சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட 10.5% உள்ஒதுக்கீட்டினை அமல்படுத்துமாறு தமிழக அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
  • இந்த இடஒதுக்கீடானது இந்தக் கல்வியாண்டு முதல் அரசுப் பணிகளிலும் அரசு கல்வி நிறுவனங்களிலும் அமல்படுத்தப்படும்.

மாநிலச்செய்திகள்

இரட்டைச் சாலை சுரங்கப் பாதை

  • திருச்சூர் – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த கேரளாவின் முதலாவது இரட்டைச் சாலை சுரங்கப் பாதையான குதிரன் சுரங்கப் பாதையின் ஒரு பக்கத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
  • இது கேரள மாநிலத்தின் முதலாவது சுரங்கப்பாதைப் சாலையாகும். 1.6 கி.மீ நீளமான இந்த சுரங்கப் பாதையானது பேச்சி – வழனி(Peechi – Vazahani) என்ற வனவிலங்குச் சரணாலயத்தின் ஊடாக அமைக்கப்பட்டுள்ளது.

100% தடுப்பூசி (Covid – 19) வழங்கிய நகரம்

  • அனைவருக்கும் கோவிட் – 19 தடுப்பூசி வழங்கிய (100%) முதல் இந்திய நகரமாகப் புவனேஷ்வர் உருவெடுத்துள்ளது.
  • 55 மையங்களில் எல்லா நேரங்களிலும் தடுப்பூசி சேவையை வழங்கி வரும் புவனேஷ்வர் மாநகராட்சிக் கழகத்திற்கு இப்பெருமை சேரும்.

ஒலிம்பிக் செய்திகள்

அண்ணா கிஸன் ஹோபர் – தங்கம்

  • இவர் ஒலிம்பிக் மகளிர் சைக்கிள் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இவர் ஆஸ்திரிய வீராங்கனை ஆவார்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the Flag.