Current Affairs in Tamil – August-4, 2021

Current Affairs in Tamil – August-4, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஆகஸ்ட் – 4, 2021

தேசியச் செய்திகள்

தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை

  • தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையினை நிறுவுவதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
  • நாட்டின் ஆராய்ச்சிச் சூழலை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • இது நாட்டின் தொழில்துறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றை இணைக்கும் ஒர் அமைப்பாக செயல்படும்.

இந்தியத் தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டாளர்

  • தீபக் தாஸ் என்பவர் தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு பொறுப்பினை ஏற்றுள்ளார். இவர் 25வது தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அலுவலர் (Controller General of Accounts –CGA) ஆவார்.
  • தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அலுவலர் என்பவர் அரசியலமைப்பின் 150வது சட்டப் பிரிவின் படி அரசின் கணக்கு வைப்பு அதிகாரி ஆவார்.

தமிழ்நாடு செய்திகள்

தமிழக சட்டப் பேரவையின் 100வது ஆண்டு நிறைவு

  • செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள சட்டப்பேரவையின் நூற்றாண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தினைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தொடங்கி வைத்தார்.

பொருளாதாரச் செய்திகள்

இ-ரூபி டிஜிட்டல் பணவழங்கீட்டு முறை

  • 2021 ம் ஆண்டு ஆகஸ்ட் 02 அன்று பிரதமர் நரேந்திர மோடி “இ ரூபி டிஜிட்டல் பணவழங்கீட்டு முறை“ என்ற ஒரு முறை“ என்ற ஒரு முறையினைத் தொடங்கி வைத்தார்.
  • இ-ரூபி என்பது இணையவழி ரசீது அடிப்படையிலான ஒரு பணவழங்கீட்டு முறை ஆகும்.
  • இது அரசிற்கும் பயனாளிகளுக்கும் இடையேயான தொடர்புகளை வரையறுக்கச் செய்வதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.

விளையாட்டுச் செய்திகள்

பி.வி. சிந்து – வெண்கலம்

  • சீனாவைச் சேர்ந்த “ஹி பிங்ஜியாவோ“ என்பவரை வீழ்த்தியதை அடுத்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி எனும் பெருமையை பி.வி.சிந்து பெற்றுள்ளார்.
  • இவர் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the Truck.