Current Affairs in Tamil – August-28, 2021

Current Affairs in Tamil – August-28, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஆகஸ்ட் – 28, 2021

தமிழ்நாடு செய்திகள்

கிரேஸ் பானு – சிறந்த மூன்றாம் பாலினத்தவர்

  • திருநங்கைச் சமுதாயத்தினரையும் சமுக நலனுக்காக அவர்கள் ஆற்றும் பங்களிப்பினையும் அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசினால் முதன்முறையாக இந்த விருதானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த விருது தமிழக சமூக நலம் மற்றும்மகளிர் அதிகாரமளிப்புத் துறையினால் வழங்கப்படுகிறது.
  • சமூக ஆர்வலர் திருநங்கை கிரேஸ் பானுவிற்கு தமிழக அரசின் முதலாவது ”சிறந்த மூன்றாம் பாலினத்தவர்” என்ற விருதானது வழங்கப்பட்டுள்ளது.

மாநில அரசுபள்ளி மாணாக்கர்களுக்கு – 7.5%

  • தொழில்முறைப் படிப்பிற்கு அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு ”முன்னுரிமை அடிப்படையில் 7.5% இட ஒதுக்கீட்டினை வழங்குவதற்கான ஒரு மசோதாவினை தமிழக சட்டசபை ஏற்றுக் கொண்டுள்ளது.

தேசிய செய்திகள்

சுஜாலாம் (SUJALAM)

  • கிராம அளவில் கழிவுநீர் மேலாண்மையை மேற்கொள்வதன் மூலம் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற கிராமங்களை அதிகளவில் உருவாக்க வேண்டி இது தொடங்கப்பட்டுள்ளது.
  • ஜல்சக்தித் துறை அமைச்சகமானது “சுஜாலாம்“ எனப்படும் ஒரு “100“ நாட்கள் அளவிலான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

வாத்சல்யா திட்டம்

  • மகாராஷ்டிரா அரசானது கோவிட் – 19 தொற்றினால் தங்களது கணவர்களை இழந்த பெண்களுக்கு உதவுவதற்காக வேண்டி வாத்சல்யா திட்டம்“ என்ற ஒரு சிறப்புத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • மேலும் இத்திட்டமானது சஞ்கய் காந்தி நிராதார் யோஜனா மற்றும் கர்குல் யோஜனா ஆகிய திட்டங்களின் கீழ் பெண்களுக்கு பயனளிக்கிறது.

ஆபரேஷன் தேவி சக்தி

  • காபூலில் இருந்து தனது குடிமக்களையும் ஆப்கன் தரப்பினரையும் வெளிவேற்றச் செய்வதற்காக வேண்டி இந்தியா மேற்கொள்ளும் ஒரு சிக்கலான நடவடிக்கைக்கு “ஆபரேஷன் தேவி சக்தி“ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the Flag.