Current Affairs in Tamil – April-3, 2021

Current Affairs in Tamil – April-3, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஏப்ரல் – 3, 2021

மாநிலச் செய்திகள்

உத்கல் திவாஸ்

  • ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் ஒடிசாவானது தற்போதைய பீகார், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகியவற்றை உள்ளடக்கிய வங்காள மாகாணத்தின் ஓர் அங்கமாக இருந்தது.
  • உத்கல் திவாஸ் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 01 அன்று ஒடிசா மாநிலம் உருவாக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.

தேசியச் செய்திகள்

இந்திய சுகாதார நலத்துறையில் முதலீட்டிற்கான வாய்ப்பு

  • ”இந்திய சுகாதார நலத்துறையில் முதலீட்டிற்கான வாய்ப்பு” என்ற அறிக்கை ஒன்றை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
  • மருத்துவமனைகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் உபகரணங்கள், மருத்துவக் காப்பீடு, தொலைதூர மருத்துவம், தனியார் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பயணங்கள் உள்ளிட்ட இந்திய சுகாதாரநலத் துறையின் பல்வேறு பிரிவுகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை இந்த அறிக்கை குறிப்பிட்டுக்காட்டுகிறது.
  • 2016-ஆம் ஆண்டு முதல் சுமார் 22% என்ற ஒட்டு மொத்த வருடாந்திர வளர்ச்சி, வளர்ச்சி வீதத்தில் இந்தியாவின் சுகாதார நலத் தொழில்துறைகள் வளர்ந்து வருகின்றன.

முக்கிய தினங்கள்

குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள்

  • 17-ஆம் நூற்றாண்டில் சீக்கியர்களையும் இந்துக்களையும் இஸ்லாமியத்திற்கு மாறுமாறு கட்டாயப்படுத்திய சட்டத்திலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய இவரது பணிக்காக இவர் வெகுவாக போற்றப்படுகிறார்.
  • குரு நானக்கின் கொள்கைகளைப் பரப்புவதற்காக காஷ்மீர் மற்றும் அசாம் போன்ற நாட்டின் பல பகுதிகளுக்கு நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டார்.
  • குரு தேக் பகதூரின் பிறந்தநாள் நாள் ஏப்ரல் 01 அன்று அனுசரிக்கப்படுகிறது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the Heart.