Current Affairs in Tamil – April-28, 2021

Current Affairs in Tamil – April-28, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஏப்ரல் – 28, 2021

தேசியச் செய்திகள்

மின்னணு சொத்து அட்டைகள் :

  • சுவாமித்வா திட்டத்தின்கீழ் மின்னணு சொத்து அட்டைகள் (E-Property Cords) வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • சுவாமித்வா திட்டமானது 2020-ம் ஆண்டில் தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ் 2020 மற்றும் 2024 ஆகிய கால கட்டங்களுக்கிடையே வரைபடமிடலானது நிலைவாரியாக (Phase-wise) மேற்கொள்ளப்படும்.
  • இத்திட்டத்தின் கீழ் நிலப்பரப்புகள் ஆளில்லா விமானங்களை (Drones) பயன்படுத்தி வரைபடமிடப்படும்.
  • தற்போது இத்திட்டமானது கர்நாடகா, மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் குறிக்கோள்கள் :

  • இது கடன் பெறுவதற்கு நிலங்களைச் சொத்துகளாக முன்வைக்கலாம் என்பதால் கிராமப்புற பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிதிநிலைத் தன்மையை வழங்க இயலும்.
  • இது நிலங்கள் பற்றிய தகவல்களை துல்லியமாக பதிவு செய்ய உதவும்.
  • இது சிறந்த கிராம திட்டமிடலுக்கு உதவும்.
  • கிராமப் பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இத்திட்டம் ஆதரவளிக்கும்.
  • கிராமப் பகுதிகளில் சொத்து தொடர்பான தகராறுகளை தீர்க்க இத்திட்டம் உதவும்.

சர்வதேசச் செய்திகள்

இட்ரிஸ் டெபி :

  • ஆப்பிரிக்காவில் நீண்ட காலம் பணியாற்றிய தலைவர்களுள் ஒருவரான சாட் நாட்டின் அதிபரான இட்ரிஸ் டெபி 2021-ம் ஆண்டு ஏப்ரல் 20 அன்று உயிரிழந்தார்.
  • அந்த நாட்டின் வடக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களுடனான மோதலில் அவர் காயமடைந்ததையடுத்து அவர் உயிரிழந்தார்.
  • ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் டெபி வெற்றி பெற்றார்.
  • இது அவரது ஆறாவது பதவிக் காலமாக இருந்திருக்கும்.
  • இட்ரிஸ் டெபி சாட் நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்தார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

வைராஃபின்

  • சமீபத்தில் இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டகமானது (DCGI – Drug Controller General of India) “வைராஃபின்னை“ என்ற மருந்தினைப் பயன்படுத்த “கட்டுப்பாடுகளுடன் கூடிய அவசரகாலப் பயன்பாட்டு ஒப்புதலை“ வழங்கியுள்ளது.
  • வைராஃபின் மருந்தானது ஹெப்படைட்டிஸ் B மற்றும் C போன்ற நோய்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
  • தற்போது மிதமான கோவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப்பட உள்ளது.
  • தொற்று ஏற்பட்ட ஆரம்ப நிலையிலேயே வைராஃபின்னின் முதல் தவணையை (Dose) வழங்குவது கோவிட்-19 நோயாளிகள் விரைவில் குணமடைய உதவும்.
  • சைடஸ் நிறுவனமானது சைகோவ்-டி எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the tree.