Current Affairs in Tamil – April-2, 2021

Current Affairs in Tamil – April-2, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

ஏப்ரல் – 2, 2021

மாநிலச் செய்திகள்

வாழைப்பழ திருவிழா

  • பாரம்பரிய நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக உத்தரப் பிரதேச அரசு 2018-ஆம் ஆண்டில் “ஒரு மாவட்டம் ஒரு உற்பத்திப் பொருள்” (One District One Product-ODOP) திட்டத்தை உருவாக்கியுள்ளது.
  • உத்தரப் பிரதேச அரசு குஷிநகரில் ”வாழைப்பழ திருவிழாவினை” ஏற்பாடு செய்தது இதில் குறைந்தது 35 விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்கள் பங்கேற்றனர்.
  • வாழை மர இழைகளிலிருந்து தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருட்கள் ODOP திட்டத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றல் திறன்மிகு நகரங்கள்

  • இரண்டு பசுமை ஆற்றல் திறன்மிகு நகரங்ளைக் கொண்ட மாநிலமாக பீகார் மாற உள்ளது. இரு நகரங்கள் ராஜ்கிர் மற்றும் புத்த கயா.
  • இத்திட்டத்தை அமல்படுத்துவதற்காக பீகார் மாநில அரசு, லக்கிசராய் மற்றும் பாகல்பூர் ஆகிய இடங்களில் 500 மெகாவாட் திறனுடைய சூரிய ஆற்றல் நிலையங்களை அமைக்க உள்ளது.
  • இரு நகரங்களை இயக்குவதற்கான ஆற்றலானது இந்திய சூரிய ஆற்றல் கழகத்தினால் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படும்.

சிறைச்சாலை வானெலி

  • சிறைச்சாலை வானெலி என்பது கைதிகளால் சிறைச்சாலைக்கு உள்ளேயே இயக்கப்பட்டு நடத்தப்படுகின்ற வானொலி.
  • வளாகத்திற்குள்ளேயே உள்ள காட்சிப்படக் கூடத்திலிருந்து ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் கைதிகள் தங்கியிருக்கும் அறைகளிலுள்ள ஒலி்பெருக்கிகள் மூலம் அவர்களைச் சென்றடையும்.
  • ”டின்கா டின்கா” என்ற அறக்கட்டளையானது மாநில அரசுடன் இணைந்து ஹரியானா சிறைச்சாலைகளில் ”சிறைச்சாலை வானொலி“ திட்டத்தை தொடங்கியுள்ளது.

சர்வதேசச் செய்திகள்

மனித உரிமைகள் அறிக்கை

  • ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இந்த அறிக்கை அமெரிக்க உள்துறையால் வெளியிடப்படுள்ளது.
  • இந்த அறிக்கை நாடுவாரியாக மனித உரிமைகளின் நிலையைப் பற்றிய விவாதங்களைக் கொண்டுள்ளது.

விருதுகள் மற்றும் பிரபலங்கள்

சரஸ்வதி சம்மன் 2020

  • இந்த விருது நாட்டின் மிகவும் மதிப்பு மிக்க மற்றும் உயரிய இலக்கிய விருதாகும். 1991-ஆம் ஆண்டில் KK பிர்லா அறக்கட்ளையாள தொடங்கப்பட்டதாகும்.
  • மராத்திய எழுத்தாளர் டாக்டர் சரண்குமார் லிம்பாலே ”Sanatan” எனும் புத்தகத்திற்காக 2020-ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் விருதினைப் பெறவுள்ளார்.
  • ”Sanatan” பட்டியல் இனத்தவர்களின் போராட்டங்கள் குறித்த ஒரு முக்கிய சமூக மற்றும் வரலாற்று ஆவணமாகும்.

Names of the Women – புத்தகம்

  • “Names of the Women” எனும் புத்தகம் ஜீத் தாயில் என்பவரால் எழுதப்பட்டது. இது சமயப் போதனைகளில் ஒடுக்கப்பட்ட, குறைக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட பெண்களின் பங்கு பற்றி கூறுகிறது.
  • மேலும் இவரது ”Narcopolis” புத்தகம் 2012-ஆம் ஆண்டு மேன்புக்கர் பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்டது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the Heart.