Monthly Current Affairs Tamil – OCTOBER-24, 2021

Monthly Current Affairs Tamil – OCTOBER-24, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

அக்டோபர் – 24, 2021

தமிழ்நாடு செய்திகள்

மக்கள் பள்ளித் திட்டம்

  • 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு பொது முடக்கத்தின் போது கற்றலில் ஏற்பட்ட இடைவெளி மற்றும் இழப்பு ஆகியவற்றைக் குறைக்கும் ஒரு முயற்சியாக தமிழக அரசானது ஒரு புதிய கற்பித்தல் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
  • மக்கள் பள்ளித் திட்டத்தின் ஒரு முக்கிய நோக்கமானது மாணாக்கர்களின் வீட்டின் அருகில் உள்ள பள்ளியல்லாத சிறிய கூடார அமைப்பில் கல்வியை வழங்குவதாகும்.

தேசியச் செய்திகள்

மத்தியப் பொதுப் பணியாளர் தேர்வாணையம் – உதவி எண்

  • பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த அரசு வேலைக்காகப் பயின்று வரும் ஆர்வலர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
  • அந்த இலவச உதவி எண் ”1800118711” என்பதாகும்.

UDAN தினம் – அக்டோபர் 21

  • இந்திய அரசானது அக்டோபர் 21 ஆம் தேதியினை UDAN தினமாக அறிவித்துள்ளது.
  • இந்தத் திட்டமானது நாட்டின் தொலைதூர மற்றும் பிராந்தியப் பகுதிகளுக்குப் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதையும் விமானப் பயணத்தை மலிவானதாக பெறச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

    பன்றியிலிருந்து மனிதனுக்குப் பொருத்தப்படும் சிறுநீரகம்

    • முதன்முறையாக மரபணு மாற்றப்பட்ட ஒரு பன்றியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறுநீரகத்தினை ஒரு மனித நோயாளிக்கு வைக்கும் அறுவைச் சிகிச்சையினை அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
    • ஆல்ஃபா-கால் (alpha-gal) என்ற ஒரு சர்க்கரை மூலக்கூறினை உற்பத்தி செய்யாத வகையில் மரபணு மாற்றப்பட்ட ஒரு பன்றியிடமிருந்து இந்தச் சிறுநீரகத்திணை அறிவியலாளர்கள் பெற்றனர்.
    • சிறுநீரகம் இணைக்கப்பட்ட பல மணி நேரங்களுக்கு அது சாதாரணமாக செயல்பட்டது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the car.