Monthly Current Affairs Tamil – OCTOBER-23, 2021

Monthly Current Affairs Tamil – OCTOBER-23, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

அக்டோபர் – 23, 2021

தமிழ்நாடு செய்திகள்

மீன் குறியீடு

  • அலங்கரிக்கப்பட்ட மீன் குறியீடு பொறிக்கப்பட்ட உறைகிணறு ஒன்று அகழ்ந்து எடுக்கப் பட்டுள்ளது.
  • மதுரை அருகே உள்ள கீழடியில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வின் ஏழாம் கட்டத்தில் இந்த உறை கிணறு அகழ்ந்தெடுக்கப்பட்டது.

பாரத்நெட் திட்டம்

  • தமிழ்நாடு பைபர்நெட் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனமானது, தமிழ்நாட்டில் பாரத் நெட் திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் 1 Gbps அளவிலான அலைவரிசை இணைப்பினை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசியச் செய்திகள்

மைக்ரோசாஃப்ட் செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்கத் திட்டம்

  • மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது ”செயற்கை நுண்ணறிவுப் புத்தாக்கத் திட்டம்” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியாவில் புத்தாக்க நிறுவனச் சூழலமைவுகளுக்கு ஆதரவு அளிக்கும் அதன் முயற்சியில் இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டது.

    நானோ நைட்ரஜன் நீர்ம உரம்

    • இலங்கை நாடானது தீங்கு விளைவிக்காத நானோ நைட்ரஜன் நீர்ம உரங்கள் அடங்கிய சரக்குப் பெட்டகத்தினை இந்தியாவிலிருந்துப் பெற்றுள்ளது.
    • நானோ நைட்ரஜன் நீர்ம உரமானது இந்திய விவசாயிகள் உரங்கள் கூட்டுறவு லிமிடெட் என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
    • இது உலகிலேயே முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the star.