Monthly Current Affairs Tamil – OCTOBER-21, 2021

Monthly Current Affairs Tamil – OCTOBER-21, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

அக்டோபர் – 21, 2021

தேசியச் செய்திகள்

ஆதார் ஹேக்கத்தான் 2021

  • இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது ”ஆதார் ஹேக்கத்தான 2021” என்ற நிகழ்வினை நடத்த உள்ளது.
  • இந்த ஆணையமானது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் நிறுவப் பட்டது.
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் இளம் புதுமை படைப்பாளர்களை அடையாளம் காணுவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படஉள்ளது.

தமிழ்நாடு செய்திகள்

பட்டியலிடப்பட்ட சாதியினர் / பழங்குடியினர் ஆணையம்

  • உயர்நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் இந்த ஆணையத்தின் தலைவராக செயல்படுவார் என முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
  • இந்த ஆணைய உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகளாகும்.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினரின் சட்ட உரிமைகள் பாதுகாக்கப் படுவதை இவர்கள் உறுதி செய்வர்.

பொருளாதாரச் செய்திகள்

நேரடி வரி வசூல் – கரூர் வைஸ்யா வங்கி

  • மத்திய நேரடி வரிகள் வாரியம் சார்பாக நேரடி வரிகளை வசூலிக்க கரூர் வைஸ்யா வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது.
  • அனுமதி பெற்ற பிறகு, நேரடி வரிகளை வசூலிப்பதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியத்துடன் கரூர் வைஸ்யா வங்கி தனது ஒருங்கிணைப்புச் செயல்முறையைத் தொடங்கியது.

    மாநிலச் செய்திகள்

    இணையதளத்தில் குடும்பஸ்ரீ தயாரிப்புப் பொருட்கள்

    • குடும்பஸ்ரீ தயாரிப்புப் பொருட்களை சந்தைப்படுத்தவும் விநியோகிக்கவும் வேண்டி ஓர் இணைய தளத்தினைத் தொடங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
    • இத்திட்டத்தின் கீழ், சுயஉதவிக் குழுக்களுக்கு உதவி வழங்கப்படும்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the star.