Monthly Current Affairs Tamil – OCTOBER-10, 2021

Monthly Current Affairs Tamil – OCTOBER-10, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

அக்டோபர் – 10, 2021தமிழ்நாடு செய்திகள்

புலம்பெயர் தமிழர் நல வாரியம்

  • தமிழ்நாடு புலம்பெயர் தமிழர்கள் நலச் சட்டமானது 2011 ஆம் ஆண்டு மார்ச் 01 அன்று முந்தைய தி.மு.க ஆட்சியின் போது இயற்றப்பட்டது.
  • முன்மொழியப்பட்டுள்ள இந்த நல வாரியமானது, ” புலம்பெயர் தமிழர் நல வாரியம்” என அழைக்கப் படும்.
  • ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 12 ஆம் தேதியானது உலக தமிழர்கள் தினமாக அனுசரிக்கப் படும்.

தேசியச் செய்திகள்

புவிசார் குறியீடுகள்

  • 51 புதிய பொருட்களுக்குச் சென்னை பதிவகத்தினால் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
  • தமிழ்நாட்டில் 5 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளிக் கூட்டமைப்பு

  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று இந்திய விண்வெளிக் கூட்டமைப்பினை டிஜிட்டல் ரீதியில் தொடங்கி வைக்க உள்ளார்.
  • இந்திய விண்வெளிக் கூட்டமைப்பானது விண்வெளி மற்றும் செயற்கைக் கோள் நிறுவனங்களுடன் தொடர்புடைய ஒரு முதன்மைத் தொழில்துறையாகும்.

    பொருளாதாரச் செய்திகள்

    உலக முதலீட்டாளர்கள் வாரம்

    • சர்வதேசப் பத்திரங்கள் ஆணைய அமைப்பானது (International Organization of Securities Commissions- IOSCO) 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 04 முதல் அக்டோபர் 10 வரையிலான தனது வது வருடாந்திர உலக முதலீட்டாளர்கள் வாரத்தினைத் தொடங்கி வைத்தது.
    • 2021 ஆம் ஆண்டிற்கான IOSCOவின் உலக முதலீட்டாளர்கள் வாரப் பிரச்சாரமானது இரண்டு கருத்துருக்களை அடிப்படையாகக் கொண்டது.
    • அவையாவன, நீடித்த நிலையான நிதி மற்றும்மோசடி மற்றும் ஊழல் தடுப்புகள்

    நாணயக் கொள்கை குழுவின் அறிவிப்புகள்

    • இந்திய ரிசர்வ் வங்கியின் 3 உறுப்பினர்கள் கொண்ட நாணயக் கொள்கை குழுவானது இசைவு நிலைப்பாடுகளைக் கடைபிடித்து, 4% ரெப்போ வீதத்தை மாற்றாமல் வைத்திருக்கிறது.
    • இது கோவிட் -19 தொற்றின் தாக்கத்தைக் குறைத்து வளர்ச்சியை மீட்டு அதனை நிலை நிறுத்துவதற்கான ஒரு முடிவாகும்.

    மாநிலச் செய்திகள்

    கவச குண்டல் திட்டம்

    • மகாராஷ்டிரா அரசானது கவச குண்டல் திட்டம் என்ற 7 நாள் அளவிலான சிறப்பு கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் இயக்கத்தைத் தொடங்கியது.
    • ஒவ்வொரு நாளும் 15 லட்சம் மக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நோக்கத்தோடு இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
    • இத்திட்டமானது அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் 100 கோடி பேருக்குத் தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற மத்திய அரசினுடைய இலக்கின் ஓர் அங்கமாகும்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the star.