Daily Current Affairs Tamil – NOVEMBER-22, 2021

Daily Current Affairs Tamil – NOVEMBER-22, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

நவம்பர் – 22, 2021

தேசியச் செய்திகள்

தேசிய மாணாக்கர் படையின் முன்னாள் மாணவர்கள் சங்கம்

  • தேசிய மாணாக்கர் படையின் முன்னாள் மாணவரான பிரதமர் நரேந்திர மோடி, “தேசிய மாணாக்கர் படையின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினை“ துவங்கி வைத்தார்.
  • ஜான்சியில் நடந்த “ராஷ்ட்ர ரக்சா சமர்பன் பர்வ்“ நிகழ்ச்சியின் நிறைவின் போது அந்த சங்கத்தின் முதல் உறுப்பினராக அவர் தன்னைப் பதிவு செய்து கொண்டார்.

82வது அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு

  • இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லா நகரில் 82வது அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • “ஒரே நாடு, ஒரே சட்டமியற்றும் தளம்“ என்ற கருத்தினை மோடி அவர்கள் இதில் முன் வைத்தார்.
  • இதன் முதல் மநாடானது 1921 ஆம் ஆண்டில் சிம்லா நகரில் நடைபெற்றது.
  • சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சகோதரரான மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் வித்தல்பாய் படேல், 1925ஆம் ஆண்டில் மத்தியச் சட்டப் பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் ஆவார்.
  • இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்காக இயற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க மசோதாவும் இந்த அவையில் தான் நிறைவேற்றப்பட்டது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the Flag.