Daily Current Affairs Tamil – NOVEMBER-21, 2021

Daily Current Affairs Tamil – NOVEMBER-21, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

நவம்பர் – 21, 2021

தேசியச் செய்திகள்

மூன்று விவசாய சட்டங்கள் ரத்து

  • 2021 ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான் ஆற்றிய உரை ஒன்றில், மூன்று விவசாயச் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய உள்ளதாக அறிவித்தார்.
  • இந்தியா முழுவதும் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு வழி வகுந்த அந்த மூன்று சட்டங்களாவன
  • • வேளாண் பொருட்களின் வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்பாட்டு மற்றும் வசதி) சட்டம், 2020
  • • அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தம்) சட்டம், 2020
  • • விவசாயிகளுக்கான (அதிகாரமளிப்பு மற்றும் பாதுகாப்பு) விலையுறுதி மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், 2020.

LIGO நிறுவனம்

  • ஹிங்கோலி வருவாய்ப் பிரிவானது மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 225 ஹெக்டேர் அளவிலான நிலங்களின் உரிமைகளை லேசர் குறுக்கீட்டு அளவி புவி ஈர்ப்பு அலை ஆய்வகத்திற்கான துணிகர (LIGO) நிறுவனத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.
  • LIGO என்பது காஸ்மிக் ஈர்ப்பு அலைகளைக் கண்டறிவதற்கும் அது குறித்து சில சோதனைகளை மேற்கொள்வதற்குமான ஒரு பெரிய ஆய்வகமாகும்.

4ஜி கைபேசி இணைப்புச் சேவை வழங்கும் திட்டம்

  • 7,000 கிராமங்களுக்கு 4ஜி கைபேசி இணைப்புச் சேவைகளை வழங்கும் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த உயர்நோக்கு லட்சியத் திட்டத்திற்கு அனைவருக்குமான சேவைக் கட்டுப்பாட்டு நிதியத்தால் (Universal Service Obligation Fund) நிதியளிக்கப்படும்.

மாநிலச் செய்திகள்

தூய்மை யமுனை நதி

  • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 2025 ஆம் ஆண்டுக்குள் யமுனை நதியை முழுமையாகச் சுத்தப்படுத்துவோம் என்று உறுதியளித்தார்.
  • 2025 ஆம் ஆண்டுக்குள் யமுனை நதியைக் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் ஏற்ற வகையில் மாற்றவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

வாட்ஸ் அப் சாட் பாட்

  • மேற்கு வங்க அரசானது இந்தியாவின் முதலாவது வாட்ஸ் அப் சாட் பாட்டைப் பொது விநியோகத் துறையில் அறிமுகப்படுத்தியது.
  • இந்த சாட்பாட் ஆனது குடிமக்கள் குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பிக்கவும், தங்களது குறைகளைப் பதிவு செய்தல் மற்றும் முக்கியமான ஆதாரங்களை அணுகுதல் போன்றவற்றை எளிதாக்கும்.
  • நெல் கொள்முதல் தொடர்பான சரிபார்க்கப்பட்ட தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் சாட் பாட் அவர்களுக்கு உதவும்.
  • இந்த சாட் பாட்டை இலவசமாகப் பயன்படுத்துவதோடு ஆங்கிலம் மற்றும் வங்காள மொழிகளில் இது இயங்குகிறது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the Plane.