Daily Current Affairs Tamil – NOVEMBER-20, 2021

Daily Current Affairs Tamil – NOVEMBER-20, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

நவம்பர் – 20, 2021

தேசியச் செய்திகள்

மருந்துத் துறையின் முதலாவது உலகப் புத்தாக்க உச்சி மாநாடு

  • “மருந்துத் துறையின் முதலாவது உலகப் புத்தாக்க உச்சி மாநாட்டினை“ பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • இந்த உச்சி மாநாடானது, வளர்ச்சிக்கான பெரும் திறன்கள் கொண்ட இந்திய மருந்துத் துறையில் உள்ள வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது.

பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா

  • பொருளாதார விவகாரங்கள் மீதான அமைச்சரவைக் குழுவானது, பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது கட்ட அமலாக்கத்தினை 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை தொடர்வதற்கும், இடதுசாரி தீவிரவாத அமைப்புகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான சாலை இணைப்புத் திட்டத்தினை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொடர்வதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த மூன்று திட்டங்களின் கீழ் திட்டமிடப்பட்ட பணிகள் முடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த காலக் கெடுவானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

16வது வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கை 2021

  • 16வது வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கையானது (கிராமப்புறம்) பிரதாம் என்ற அறக்கட்டளையால் வெளியிடப்பட்டது.
  • கிராமப்புற இந்தியா முழுவதும் உள்ள 5 முதல் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் அடிப்படை வாசிப்புத் திறன் மற்றும் எண்கணித செயல்திறன் உள்ளிட்ட பள்ளிக் கல்வி நிலை குறித்த அறிக்கைகளை வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கையானது வழங்குகிறது.

மாநிலச் செய்திகள்

சிறந்த டிஜிட்டல் நிதிச் சேவைகளுக்கான ASSOCHAM விருது

  • இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணைக் கழகத்தினால் வழங்கப்படும் சிறந்த டிஜிட்டல் நிதிச் சேவைக்கான விருதினை கர்நாடக விகாஸ் கிராமீனா வங்கி பெற்றுள்ளது.
  • “ஆத்ம நிர்பர் பாரத்“ என்ற இந்தியாவின் தொலைநோக்கு அம்சத் திட்டத்திற்கு ஏற்ப இந்த விருதானது வழங்கப்படுகிறது.

சிறந்த சுற்றுலாக் கிராமங்கள்

  • தெலுங்கானா மாநிலத்தின் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி கிராமமானது ஐக்கிய நாடுகள் சபையின் உலகச் சுற்றுலா அமைப்பினால் சிறந்த சுற்றுலாக் கிராமங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இந்த கிராமமானது கையினால் நெய்யப்பட்ட பிரபலமான இகாட் ரக புடவைகளுக்கு புகழ் பெற்றது ஆகும்.
  • டிசம்பர் மாதம் 02 ஆம் தேதி அன்று ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உலகச் சுற்றுலா அமைப்பினுடைய பொதுச் சபையின் 24 வது அமர்வில் இந்த விருதானது வழங்கப்படும்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the Plane.