Daily Current Affairs Tamil – NOVEMBER-05, 2021

Daily Current Affairs Tamil – NOVEMBER-05, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

நவம்பர் – 05, 2021

தேசியச் செய்திகள்

பகல் துல் நீர்மின் நிலையம்

  • மத்திய ஆற்றல், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் R.K. சிங் மருசுதார் நதி வழியில் அமைந்த பகல் துல் நீர்மின் நிலையத்தின் ஒரு கிளை மின் நிலையத்தினைத் திறந்து வைத்தார்.
  • பகல் துல் நீர்மின் நிலையமானது 1000 MW திறனுடைய ஒரு திட்டமாகும்.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மருந்திற்கு அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதி

  • பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்தினை 18 வயதினருக்கும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்துவதற்காக வேண்டி அதன் அவசரகாலப் பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • கோவாக்சின் என்பது முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு தடுப்பு மருந்து ஆகும்.
  • இது ஹைதராபாத்திலுள்ள பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தினால் தயாரிக்கப்பட்டது.

கங்கை திட்டம் – கின்னஸ் உலகச் சாதனை

  • கங்கை உத்வத்தின் முதல் நாளில் (நதித் திருவிழா 2021) தேசியத் தூய்மை கங்கை நதித் திட்டமானது கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது.
  • அதிகளவில் கையால் எழுதப்பட்ட குறிப்புகளின் புகைப்படங்கள் ஒரு மணிநேரத்தில் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டதன் காரணமாக இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.
  • கங்கை உத்சவ் நிகழ்ச்சியானது கங்கைப் புனரமைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த நிகழ்விற்கு ஒரு உத்தேவகம் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மாநிலச் செய்திகள்

சுகாதார அமைப்புகள் – மேகாலயா

  • இந்திய அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
  • இதற்கு ”மேகாலயாவில் சுகாதார அமைப்பினை வலுப்படுத்தும் திட்டம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சர்வதேச விதை மாநாடு – தெலுங்கானா

  • உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் காணொளி மூலம் நடத்தப்படும் மாநாட்டில் பங்கேற்பதற்கு வேண்டி தெலுங்கானா அரசிற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
  • இந்த மாநாடானது விதை உற்பத்தித் துறையில் மேம்பாடு குறித்து விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்படுகிறது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the cup.