Daily Current Affairs Tamil – November-04, 2021

Daily Current Affairs Tamil – November-04, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

நவம்பர் – 04, 2021

தேசியச் செய்திகள்

பருவநிலைச் சமவிகித கண்காணிப்பு அமைப்பு

  • பருவநிலைச் சமவிகித கண்காணிப்பு அமைப்பு என்பது சமீபத்தில் தொடங்கி வைக்கப் பட்ட ஓர் இணையவழி முகப்புப் பக்கமாகும்.
  • இந்தியாவினுடைய பருவநிலைச் சமவிகிதக் கண்காணிப்பு அமைப்பானது, உலகம் முழுவதுமான பருவநிலை நடவடிக்கை, உமிழ்வு நிலையிலுள்ள ஏற்றத் தாழ்வுகள், ஆற்றல் மற்றும் வள நுகர்வு மற்றும் பல நாடுகளின் தற்போதையப் பருவநிலை கொள்கைகளை மதிப்பிடும்.

NCLAT தலைவர் – அசோக் பூசன்

  • மத்திய அரசானது உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அசோக் பூசன் அவர்களை தேசிய நிறுவனச் சட்ட மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் புதிய தலைவராக நியமித்துள்ளது.
  • இவர் கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.

டெய்ரி சஹாகர் திட்டம்

  • மத்தியக் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் டெய்ரி சஹாகர் என்ற திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டத்தின் ஒட்டு மொத்த குறிக்கோள்களானது,
  • • விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் மற்றும்
  • • ஆத்ம நிர்பர் பாரத் ஆகும்.

பொருளாதாரச் செய்திகள்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம்

  • 2020-21 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிகளின் மீதான வட்டி விகிதத்தினை 8.5% ஆக விதித்து நிதி அமைச்சகம் அங்கீகரித்துள்ளது.
  • இந்த விகிதமானது 2019-20 ஆம் ஆண்டில் மாற்றப்படாமல் இருந்தது.
  • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியானது PPF மற்றும் சுகன்யா சம்ரிதி ஆகிய கணக்குகளுடன் விலக்கு-விலக்கு-விலக்கு என்ற திட்டத்தின் கீழ் முழுவதும் வரி விலக்கு பெற்ற ஒரு நிலையான வருவாய் வசதியாகும்.

மாநிலச் செய்திகள்

ஆப்பிள் திருவிழா

  • மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் காணொலி வாயிலாக ஆப்பிள் திருவிழாவைத் தொடங்கி வைத்தனர்.
  • இது ஐம்மு & காஷ்மீரின் ஸ்ரீ நகரில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
  • ஆண்டுக்கு 2 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான உற்பத்தியோடு ஜம்மு & காஷ்மீரின் ஆப்பிள் உற்பத்தியானது தேசிய உற்பத்தி அளவில் 87% பங்கினை வகிக்கிறது.

சிந்து நதி ஓங்கில் – கணக்கெடுப்பு

  • பஞ்சாப் மாநிலமானது சிந்து நதி ஓங்கில்களின் கணக்கெடுப்பைத் தொடங்க உள்ளது.
  • சிந்து நதி ஓங்கிலின் அறிவியல் பெயர் பிளாடானிஸ்தா கேஞ்ஜெட்டிகா மைனர் ஆகும்.
  • 2019 ஆம் ஆண்டில் சிந்து நதி ஓங்கிலானது பஞ்சாபின் மாநில நீர்வாழ் உயிரினமாக அறிவிக்கப் பட்டது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the key.