Daily Current Affairs Tamil – NOVEMBER-27, 2021

Daily Current Affairs Tamil – NOVEMBER-27, 2021

CURRENT AFFAIRS – 2021

NOVEMBER – 27, 2021

தமிழ்நாடு செய்திகள்

வேதா நிலையம்

  • மறைந்த தமிழக முதல்வர் J. ஜெயலலிதா அவர்களின் இல்லத்தினை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று அறிவித்த முந்தைய அ.தி.மு.க அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
  • இந்த இல்லம் “வேதா நிலையம்“ என்று அழைக்கப்படுகிறது.
  • இந்த இல்லமானது சென்னையிலுள்ள போயஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ளது.

தேசியச் செய்திகள்

பிரதான் மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா

  • மத்திய அரசானது பிரதான் மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா என்ற திட்டத்தை நான்கு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
  • இத்திட்டமானது கோவிட்-19 பெருந்தொற்றிற்குப் பிறகு 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்தின்கீழ், ஒரு நபருக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகிறன.

O-SMART திட்டம்

  • “பெருங்கடல் பணிகள், மாதிரிகளைச் சேகரித்தல், பயன்பாடு, வளங்கள் மற்றும் தொழில்நுட்பம்” (O-SMART: Ocean Services, Modelling, Application, Resources and Technology) என்ற திட்டமானது 2021-26 ஆகிய காலக் கட்டத்திற்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • பிரதமர் மோடி தலைமையிலான மத்தியப் பொருளாதார விவகாரங்கள் மீதான அமைச்சரவைக் குழு இதற்கு ஒப்புதல் அளித்தது.
  • O-SMART திட்டம் 7 துணைத் திட்டங்களை உள்ளடக்கியது.


பொருளாதாரச் செய்திகள்

சரிநிகர் வரி விதிப்பிலிருந்து மாற்றம் 2020

  • இணைய வர்த்தக வழங்கீடுகள் மீது இந்தியா விதித்த 2% சரிநிகர் வரி விதிப்பிலிருந்து (2020) மாறுவதற்கும் 2 ஆம் நிலை தீர்வின் கீழான சரிநிகர் வரி விதிப்பு தொடர்பான அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைகள் மீதும் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்தள்ளன.
  • 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் தொடங்கப்பட உள்ள இந்த மாற்று அணுகுமுறை டிஜிட்டல் பொருளாதாரத்தின் வரிச் சவால்களுக்கான 2 நிலை தீர்வுகளின் கீழ் மேற்கொள்ளப் பட்டது.

JP மோர்கள் – உலகின் மிக ஒழுங்கான (முறையான) வங்கி

  • முறையான பரந்த நிதி மேலாண்மை அமைப்பிற்காக வேண்டி உலகின் மிக ஒழுங்கான வங்கியாக J.P. மோர்கன் சேஸ் வங்கி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உலக ஒழுங்குமுறை அமைப்புகளால் வெளியிடப்பட்ட சமீபத்திய வருடாந்திர முன்னணி வழங்கீட்டு நிறுவனங்கள் தரவரிசையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
  • G20 நாடுகளின் ஒழுங்குமுறை அமைப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட நிதி நிலைத்தன்மை வாரியமானது உலகின் 30 மிக ஒழுங்கான வங்கிகளின் சமீபத்தியப் பட்டியலை வெளியிட்டது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the car.