Daily Current Affairs Tamil – DECEMBER-17, 2021

Daily Current Affairs Tamil – DECEMBER-17, 2021

CURRENT AFFAIRS – 2021

DECEMBER – 17, 2021

தமிழ்நாடு செய்திகள்

JICA மற்றும் தமிழ்நாடு ஒப்பந்தம்

  • தொற்ற நோய்களைத் தடுப்பது மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான கலந்துரையாடல் ஒப்பந்தத்தில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை மற்றும் தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை ஆகியவை இணைந்து கையெழுத்திட்டுள்ளன.
  • தொற்றா நோய்களைத் தடுத்தல் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதில் சுகாதார பணியாளர்களின் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்தச் செய்வதில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.

தேசியச் செய்திகள்

ஓமைக்ரான் தொற்றைக் கண்டறியும் சோதனை

  • SARS-CoV2 வைரசின் ஓமைக்ரான் திரிபினை வெறும் 90 நிமிடங்களில் கண்டறியும் RT-PCR அடிப்படையிலான ஒரு பரிசோதனை முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
  • இந்த ஆராய்ச்சியாளர்கள் டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் குஷ்மா உயிரியல் அறிவியல் கல்வி நிறுவனத்தினைச் சேர்ந்தவராவர்.
  • இந்தச் சோதனையானது SARS-CoV2 வைரசின் இதர திரிபுகளில் இல்லாத, ஓமைக்ரான் திரிபிலுள்ள சில குறிப்பிட்ட பிறழ்வுகளைக் கண்டறிவதன் அடிப்படையிலானதாகும்.

போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் (திருத்தம்) மசோதா, 2021

  • 2021 ஆம் ஆண்டு போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் (திருத்தம்) (Narcotic Drugs and Psychotropic Substance) என்ற ஒரு மசோதாவானது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டு மசோதாவானது 1985ஆம் ஆண்டு போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் என்ற சட்டத்தினைத் திருத்தி அமைக்கிறது

பொருளாதாரச் செய்திகள்

bob world wave

  • பாங்க் ஆஃப் பரோடா வங்கியானது ”bob world wave’’ எனப்படும் அணியக் கூடிய ஒரு பணவழங்கீட்டு வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • கடன் வழங்கும் நிறுவனங்கள் மிகவும் வசதியான மற்றும் பணமற்ற டிஜிட்டல் பண வழங்கீட்டு முறைகளை அதிகளவில் பயன்படுத்துவதற்காக வேண்டி இந்த வாய்ப்பினைப் பயன்படுத்துகின்றனர்.

மாநிலச் செய்திகள்

முதல் FM வானொலி நிலையம்-லடாக்

  • லடாக் ஒன்றியப் பிரதேசத்தின் தலைநகரான லே நகரில் அதன் முதல் FM வானொலி நிலையமானது நிறுவப்பட்டுள்ளது.
  • இந்த முதல் வானொலி நிலையத்தினை லடாக்கிற்கான ஆலோசகர் உமாங் நருலா என்பவர் திறந்து வைத்தார்.
  • லே & கார்சில் ஆகியவற்றிற்கான அதிர்வெண் ஆனது 91.1 FM ஆகும்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the house.