Daily Current Affairs Tamil – DECEMBER-16, 2021

Daily Current Affairs Tamil – DECEMBER-16, 2021

CURRENT AFFAIRS – 2021

DECEMBER – 16, 2021

தேசியச் செய்திகள்

ஆத்ம நிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா

  • கோவிட்-19 பெருந்தொற்றின் போது வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக ஆத்ம நிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா என்ற திட்டமானது அறிமுகப்படுத்தப் பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ் அதிக பயனாளிகளைக் கொண்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தினைப் பெற்றுள்ளது.
  • மகாராஷ்டிராவைத் தொடர்ந்து குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

SMART அமைப்பு

  • SMART என்ற அமைப்பானது, ரேடாருக்குப் புலப்படாத வழக்கமான ரேடார் தொழில் நுட்பத்திற்கும் அப்பால் நீர்மூழ்கி கப்பல்களின் போர் எதிர்ப்புச் செயல்திறன்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • SMART அமைப்பானது ரேடாருக்குப் புலப்படாத தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணை வெளியீட்டு அமைப்பு மற்றும் வான்குடை மிதவை வழங்கீட்டு அமைப்பு ஆகியவற்றை ஏந்திச் சென்றது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது இந்தியக் கடற்படைக்காக வேண்டி இந்த ஆயுதத்தினை உருவாக்கியுள்ளது.

பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான தேசிய உதவி எண்

  • மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான ஒரு தேசிய உதவி எண்ணினை வெளியிட்டார்.
  • அனைவரின் மீதான பாகுபாட்டினை முடிவுக்குக் கொண்டு வந்து அனைவருக்கும் பாதுகாப்பினை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சட்டத்தின் விதிகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த உதவி எண்ணின் ஒரு நோக்கம் ஆகும்.
  • 14566 என்ற அந்த இலவச உதவி எண்ணானது 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும்.

சர்வதேசச் செய்திகள்

ஆசிய மேம்பாட்டுக் கண்ணோட்ட அறிக்கை

  • ஆசிய மேம்பாட்டு வங்கியானது இந்த அறிக்கையைச் சமீபத்தில் வெளியிட்டது.
  • இந்த அறிக்கையானது 2021 ஆம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் ஆசிய நாடுகளுக்கான வளர்ச்சிக் கணிப்பினைக் குறைத்துள்ளது.
  • ஓமைக்ரான் எனும் புதிய கொரோனா வைரஸ் மாற்றுரு ஏற்படுத்தியுள்ள நிச்சயமற்ற தன்மைக்கு ஏற்ப இந்த மாற்றமானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.

பொருளாதாரச் செய்திகள்

டெதர்

  • மியான்மர் நாட்டின் நிழல் அரசானது டெதர் எனப்படும் உலகின் மிகப்பெரிய இணைய சங்கேதப் பணத்தின் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • டெதர் இணைய சங்கேதப் பணமானது அதிகாரப்பூர்வ பணமாகப் பயன்படுத்தப்படும்.
  • இந்த நடவடிக்கையானது நிதி திரட்டுவதையும் பண வழங்கீடுகளையும் எளிதாக்கும்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the cup.