Daily Current Affairs Tamil – DECEMBER-12, 2021

Daily Current Affairs Tamil – DECEMBER-12, 2021

CURRENT AFFAIRS – 2021

DECEMBER-12, 2021

தமிழ்நாடு செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான தேசிய விருது

 • மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதில் சிறந்த மாநிலமாக தமிழக மாநிலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
 • சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று (டிசம்பர் 03) புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் இந்த விருதானது வழங்கப்பட்டது.
 • சேலம் மாவட்டமானது, மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் ஒரு சிறந்த மாவட்டம் என்பதற்கான விருதைப் பெற்றது.

நைட்டிங்கேல் விருது

 • மதுரையைச் சேர்ந்த 50 வயது ஆண் செவிலியரான டேனியல் விஜயராஜ் என்பவருக்கு நைட்டிங்கேல் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
 • லண்டனில் உயரிய விருதான நைட்டிங்கேல் விருதானது, செவிலியர்களின் மகத்தான சேவையைப் பாராட்டி ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது.

தமிழில் முன்னெழுத்துகள்

 • பள்ளி மற்றும் கல்லூரிகளில் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் பெயர்களின் முன்னெழுத்துகளை (initials) தமிழில் எழுதுவதைக் கட்டாயம் எனக் கூறி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 • பொது மக்கள் அரசாங்கப் பதிவேடுகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் சமயத்திலும் இந்த உத்தரவானது பொருந்தும்.
 • தமிழக மாநில அரசானது, ஏற்கானவே தனது பணியாளர்களைத் தங்களது பெயர் மற்றும் முன்னெழுத்துக்களைத் தமிழில் கையொப்பமிடுவதனைக் கட்டாயம் செய்து உள்ளது.

ஸ்பாஞ்ச் சிட்டி (உறிஞ்சு நகரம்)

 • நகர்ப்புறத்தில் மழைநீரால் ஏற்படும் வெள்ளைத்தைக் கட்டுப்படுத்தப் புதுமையான நீர் மேலாண்மை உத்திகளைக் கடைபிடிக்கவும் சென்னையை ஒரு ஸ்பாஞ்ச் சிட்டியாக (உறிஞ்சு நகரமாக) மாற்றவும் சென்னை மாநகராட்சிப் பணிகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளது.
 • ஸ்பாஞ்ச் சிட்டி என்பது நகர்ப்புறங்களை அதிகளவில் நீரை உள்வாங்கக் கூடியதாக மாற்றுவதற்கும் மழைநீரை சேமிப்பதற்காக அதிக அளவில் திறந்தவெளிகளை அமைப்பதற்குமான ஒரு திட்டமாகும்.

தேசியச் செய்திகள்

சரயு கால்வாய் தேசியத் திட்டம்

 • உத்தரப் பிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தில் உள்ள சரயு கால்வாய் தேசியத் திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.
 • சரயு கால்வாய் திட்டம் உத்தரப் பிரதேசத்தின் மிகப்பெரியத் திட்டமாகும்.
 • மொத்தம் 6,600 கி.மீ. நீளமுடைய இந்த கால்வாய்கள், 318கி.மீ நீளமுடைய பிரதான கால்வாயுடன் இணைக்கப்பட உள்ளன.

2021 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை

 • கூகுள் இந்தியா நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான தேடல் போக்குகளை அறிவித்ததோடு இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட சிறந்த தேடல்களையும் அறிவித்துள்ளது.
 • இதன்படி, 2021 ஆம் ஆண்டில் கிரிக்கெட் மற்றும் கோவின் (CoWin) ஆகியவை அதிகம் தேடப் பட்டவை ஆகும்.

சர்வதேசச் செய்திகள்

உலக மலேரியா அறிக்கை 2021

 • இந்த ஆண்டின் அறிக்கையானது அனைத்து உலக சுகாதார அமைப்புப் பகுதிகளிலும் உள்ள மலேரியா பரவும் நாடுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப் பட்டுள்ளது.
 • ஒரு விரைவான நடவடிக்கையானது எடுக்கப்படாவிட்டால் இந்த நோய் உடனடியாக மீண்டும் எழுச்சி பெற்று உலகம் முழுவதையும் குறிப்பாக ஆப்பிரிக்காவினை அதிக ஆபத்தில் ஆழ்த்த உள்ளது.

பொருளாதாரச் செய்திகள்

Paytm பணவழங்கீட்டு வங்கி

 • இந்திய ரிவர்வ் வங்கியானது Paytm பணவழங்கீட்டு வங்கிக்குப் பட்டியலிடப்பட்ட வங்கி எனும் அந்தஸ்தினை வழங்கியுள்ளது.
 • இந்த வங்கியானது 1934 ஆம் ஆண்டிற்கான இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 2வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.
 • இந்த வங்கியானது, அதிக நிதிச் சேவைகள் மற்றும் தயாரிப்புகளைக் கொண்டு வர வேண்டி இந்த ஒப்புதல் உதவும்.

மாநிலச் செய்திகள்

காவல்துறை ஆணைய அமைப்பு-போபால் மற்றும் இந்தூர்

 • போபால் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் காவல்துறை ஆணைய அமைப்பினை செயல்படுத்துவதற்கு மத்தியப் பிரதேச அரசு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
 • இந்த அறிவிப்பின் மூலம், இரு நகரங்களிலும் ADG அந்தஸ்து கொண்ட காவல்துறை ஆணையர்கள் நியமிக்கப்படுவர்.
 • இந்தக் காவல்துறை ஆணைய அமைப்பின் கீழ், காவல்துறை ஆணையர் மாவட்ட நிர்வாக அதிகாரியிடம் இணங்கி கீழ்ப்படிய வேண்டியதில்லை.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

  Please prove you are human by selecting the tree.