Daily Current Affairs Tamil – DECEMBER-03, 2021

Daily Current Affairs Tamil – DECEMBER-03, 2021

CURRENT AFFAIRS – 2021

DECEMBER-03, 2021

தேசியச் செய்திகள்

எல்லைப் பாதுகாப்பு படை- 57வது ஸ்தாபன தினம்

  • எல்லைப் பாதுகாப்புப் படையானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 01 அன்று தனது 57வது ஸ்தாபன தினத்தினைக் கொண்டாடியது.
  • இது வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுடனான இந்திய எல்லையைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பாகும்.
  • இந்தப் படையானது இந்தியப் பிராந்தியத்தின் முதல்கட்டப் பாதுகாப்பு என்று அழைக்கப் படுகிறது.

AIRNxt

  • நடைபெற்று வரும் ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இளைஞர்கள் தங்களது குரல்களை ஒலிபரப்புவதற்கான ஒரு தளத்தினை வழங்குவதற்காக AIRNxt என்ற ஒரு புதிய திட்டத்தைத் தொடங்க அகில இந்திய வானொலி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
  • அகில இந்திய வானொலி நிறுவனமானது உள்ளுர் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த இளைஞர்களை அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதித்து, அது இளைஞர்களை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகளைப் பற்றி விவாதிக்கவும் நிர்வகிக்கவும் அனுமதிக்கும்.

Democracy, Politics and Governance – புத்தகம்

  • இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், ஆங்கிலத்தில் “Democracy, Polity and Governance” மற்றும் இந்தியில் ”லோக்தந்தர், ராஜ்நீதி மற்றும் தர்மம்” என்று தலைப்பிடப்பட்ட ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
  • இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப் பட்டதன் 7வது ஆண்டு நிறைவின் போது இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது.
  • இந்தப் புத்தகத்தினை டாக்டர் A.சூரியப்பிரகாஷ் என்பவர் எழுதியுள்ளார்.

சர்வதேசச் செய்திகள்

கைஹைடிசுகா சச்சிகாரும்

  • கைஹைடிசுகா சச்சிகாரும் (Kyhytysuka Sachicarum) என்பது ஒரு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவினால் கண்டறியப்பட்ட ஒரு புதிய கடல்சார் ஊர்வன இனம் ஆகும்.
  • இது அழிந்துவிட்ட ஒரு இனமாகும்.
  • கைஹைடிசுகா என்றால் ”கூர்மையான ஒன்றைக் கொண்டு வெட்டுதல்” என்று பொருளாகும்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the house.