Daily Current Affairs Tamil – DECEMBER-01, 2021

Daily Current Affairs Tamil – DECEMBER-01, 2021

CURRENT AFFAIRS – 2021

December 01, 2021

தேசியச் செய்திகள்

உலகின் மிக உயரமான தூண் பாலம்

  • இந்திய இரயில்வே நிர்வாகமானது மணிப்பூரில் உலகின் மிக உயரமான ஒரு தூண் இரயில் பாலத்தைக் கட்டமைத்து வருகிறது.
  • மணிப்பூரில் இரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளும் இந்தத் திட்டமானது ஜிரிபம்-இம்பால் இரயில்வே பாதையின் ஒரு பகுதியாகும்.
  • மணிப்பூர் பாலத்தின் மொத்த நீளமானது 703 மீட்டர் ஆகும்.

1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போர் பற்றிய புத்தகம்

  • இந்திய ராணுவ ஜெனரல் MM.நரவனே,” Bangladesh Liberation @ 50years.”Bijoy” with Synergy, India-Pakistan War 1971” என்ற ஒரு புத்தகத்தினை வெளியிட்டார்
  • இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த படைவீரர்களின் சுய விவரங்களின் ஒரு தொகுப்பாகும்.
  • இந்தப் புத்தகமானது 1971 ஆம் ஆண்டு போரின் வரலாற்று மற்றும் நிகழ்வுப் பதிவுகளின் ஒரு தொகுப்பாகும்.
  • இது இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய இரு நாடுகளின் நூலசிரியர்களால் எழுதப் பட்டது.

பொருளாதாரச் செய்திகள்

தனியார் வங்கிகளுக்கான புதிய விதிமுறைகள்

  • புதிய விதிமுறைகளின் கீழ் வங்கிகளின் பங்குகள் குறித்த விளம்பரதார்களுக்கான வரம்பினை 15 சதவீதத்திலிருந்து 26% ஆக உயர்த்துவதற்கான பரிந்துரையை இந்திய ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் இயக்குனரான பிரசன்ன குமார் மொஹந்தி இந்த உள்செயற்குழுவிற்குத் தலைமை வகிக்கிறார்.

மாநிலச் செய்திகள்

STREET திட்டம்

  • கேரள மாநிலச் சுற்றுலாத் துறையானது ஏழு மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் STREET என்ற திட்டத்தைத் தொடங்க உள்ளது.
  • STREET என்பது “Sustainable, Tangible, Responsible, Experiential, Ethnic, Tourism hubs” என்பதன் சுருக்கமாகும்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the flag.