Current Affairs in Tamil – September-7, 2021

Current Affairs in Tamil – September-7, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

செப்டம்பர் – 7, 2021

தேசியச் செய்திகள்

ஆயுஷ் ஆப்கே த்வார்

  • ஆயுஷ் அமைச்சகமானது இந்தியா முழுவதும் சுமார் 45 இடங்களில் “ஆயுஷ் ஆப்கே த்வார்” எனும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • ஆயுஷ் பவன் ஊழியர்களுக்கு மருத்துவக் குணங்கள் நிறைந்த செடிகளை வழங்கி ஆயஷ் இணை அமைச்சர் இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.

கர்பி அமைதி ஒப்பந்தம்

  • மத்திய அரசானது ஒரு முத்தரப்பு ஒப்பந்தமான “கர்பி அமைதி ஒப்பந்தத்தில்“ கையெழுத்திட்டுள்ளது.
  • 1980களிலிருந்து கொலைகள், இன வன்முறை கடத்தல் மற்றும் வரிவதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் நிறைந்த அசாமில் கர்பி குழுவினரின் கிளர்ச்சியானது பெரும் வரலாற்றைக் கொண்டுள்ளதனால் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
  • கர்பி என்பது அசாமிலுள்ள ஒரு பெரிய சமூக இனமாக இருப்பதோடு இது பல பிரிவுகளாகவும் வகுப்புகளாகவும் காணப்படுகிறது.

சுற்றுச்சூழல் செய்திகள்

செந்நிற காதுடைய ஆமை

  • ஒரு செந்நிற காதுடைய ஆமையானது இடுக்கியில் உள்ள மலங்கரா அணையில் கண்டறியப்பட்டது.
  • இந்த ஆமை இனம் தெற்கு அமெரிக்கா (மிசிசிபி நதி) மற்றும் வடக்கு மெக்சிகோ ஆகிய பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டது.
  • இது உலகின் 100வது ஆக்கிரமிப்பு இனங்கள்(Invasive species) என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

50மீ கலப்பு பிஸ்டெல்

  • அசாகா துப்பாக்கி சுடுதல் பயிற்சிக் களத்தில் நடைபெற்ற P4 கலப்பு 50மீ பிஸ்டல் SH1 இறுதிப் போட்டியில் இந்தியத் துப்பாக்கி சுடும் வீரர்களான மணீஷ் நர்வால்(Gold) மற்றும் சிங்ராஜ் அதானா (Silver) ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the star.