Current Affairs in Tamil – September-4, 2021

Current Affairs in Tamil – September-4, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

செப்டம்பர் – 4, 2021

தேசியச் செய்திள்

ககன்யான்

  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது ககன்யான் செயல்பணி பெட்டக உந்துவிசை அமைப்பினுடைய செயல்முறை மாதிரி அமைப்பின் முதல் வெப்பச் சோதரனையை வெற்றிகரமாக நடத்தியது.
  • இது தமிழகத்திலுள்ள மகேந்திரகிரியில் அமைந்த உந்துவிசை சோதனை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
  • இது மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதற்கான இந்தியாவின் முதலாவது திட்டமான ககன்யான் திட்டத்தின் உலாவி மாதிரியின் ஓர் அங்கமாகும்.

லடாக் – அரசு விலங்கு மற்றும் பறவை

  • லடாக் ஒன்றியப் பிரதேசமானது பனிச்சிறுத்தை மற்றும் கருங்கழுத்து கொக்கு ஆகிய இரு அருகி வரும் உயிரினங்களை முறையே மாநில விலங்கு மற்றும் மாநிலப் பறவையாக ஏற்றுக் கொண்டுள்ளது.
  • கருங்கெழுத்து கொக்குகள் லடாக்கின் சாங்க்தாங்க் பகுதியில் மட்டும் காணப்படுகின்றன. IUCN வகைப்பாட்டின் கீழ், இப்பறவை அச்சுறுத்தப்படுதல் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சபாத் பயிற்சி – 200 இராணுவ வீரர்கள்

  • இந்திய ஆயுதப் படையின் ஒரு படைப் பிரிவானது சபாத்(ZAPAD) என்ற பயிற்சியில் பங்கேற்கிறது.
  • ZAPAD 2021 பயிற்சியானது ரஷ்ய ஆயுதப் படைகளின் கள அளவிலான பயிற்சிகளுள் ஒன்றாக இருப்பதோடு தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அது முதன்மையானது.

விருதுகள்

ரமோன் மகசேசே விருது

  • ரமோன் மகசேசே விருதானது ஆசியாவின் மிக உயரிய விருதாகும்.
  • இது 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறுவப்பட்டது.
  • இது ஆசியாவில் நோபல் பரிசுக்கு இணையான ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • 2021 ம் ஆண்டிற்கான பட்டியல்,
    • வங்காள தேசம் – டாக்.ஃபிர்தோசி காத்ரி
    • பாகிஸ்தான் – முகமது அம்ஜத் சாகிப்
    • பிலிப்பைன்ஸ் – ராபெர்டோ பேலோன்
    • அமெரிக்கா – ஸ்டீவன் முன்சி
    • இந்தோனேசிய – Watchdoc

இந்தியன் டோர்ஜே ஆங்சுக்

  • டோர்ஜே ஆங்சுக் சர்வதேச வானியல் அமைப்பின் கௌரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் லடாக் பகுதியிலுள்ள ஹான்லே எனுமிடத்தில் அமைந்த இந்திய வானியல் இயற்பியல் கல்வி நிறுவனத்திற்குச் சொந்தமான இந்திய வானியல் ஆய்வகத்தின் ஒரு பொறியிலாளர் ஆவார்.
  • இந்த மதி்ப்புமிக்க அமைப்பில் இத்தகைய பொறுப்பினை பெற்ற முதல் மற்றும் ஒரே இந்தியன் ஆங்சுக் ஆவார்.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the flag.