Current Affairs in Tamil – September-26, 2021

Current Affairs in Tamil – September-26, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

செப்டம்பர் – 26, 2021

தேசியச் செய்திகள்

அர்ஜுன் பீரங்கி கொள்முதல்

  • இந்திய இராணுவத்திற்காக வேண்டி 118 அர்ஜுன் முக்கியப் போர் பீரங்கிகளை வாங்குவதற்கான ஆணையைப் பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது. 118 அர்ஜுன் MK-1A பீரங்கிகளை வாங்குவதற்காக சென்னையிலுள்ள கனரக வாகன தொழிற்சாலையுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஓர் ஒப்பந்தத்தினை மேற்கொண்டு உள்ளது.
  • அர்ஜுன் பீரங்கியானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும்.

கல்வி அமைச்சகத்தின் குழுத் தலைவர் – K.கஸ்தூரிங்கன்

  • பள்ளிப்பருவ, சிறுவயது, ஆசிரியர் மற்றும் பதின்ம வயதினருக்கான கல்விக்காக ஒரு புதிய பாடத்திட்டத்தை வகுப்பதற்காக வேண்டி 12 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றினை மத்தியக் கல்வி அமைச்சகம் நியமித்துள்ளது.

தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு

  • மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தேசிய ஒற்றைச் சாளர அமைப்பினை (National Bingle Window System – NSWS) தொடங்கி வைத்தார்.
  • இது முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்களுக்காகத் தொடங்கப்பட்டுள்ளது.
  • NEWS என்பது அரசின் ஒப்புதல்தகளையும் அனுமதிகளையும் பெறுவதற்கு என்று முதலீட்டாளர்கள் அல்லது தொழில் முனைவோருக்கான ஒரே தீர்வாக செயல்படும் ஓர் ஒற்றைச் சாளரத் தளமாகும்.
  • இந்தத் தளமானது இன்வெஸ்ட் இந்தியா அமைப்புடன் இணைந்து தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறையினால் உருவாக்கப்பட்டது.
Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

Get a Call from our Expert Counsellor

    Please prove you are human by selecting the house.