Current Affairs in Tamil – September-2, 2021

Current Affairs in Tamil – September-2, 2021

நடப்பு நிகழ்வுகள் – 2021

செப்டம்பர் – 2, 2021

தேசியச் செய்திகள்

கடலோர காவற்படைக் கப்பல் – விக்ரஹா

  • விக்ரஹா எனப்படும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு கடலோரக் காவற்படைக் கப்பலினைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்தில் சென்னையில் தொடங்கி வைத்தார்.
  • இந்த 98மீ நீளம் கொண்ட கப்பலானது ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் பணியமர்த்தப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

உலகின் உயரமான திரையரங்கம்

  • உலகின் மிக உயரமான திரையரங்கமானது லடாக்கில் திறக்கப்பட்டுள்ளது.
  • அதன் முதலாவது நடமாடும் டிஜிட்டல் திரையரங்கமானது லே பகுதியில் 11,562 அடி உயரத்தில் உள்ள பால்டன் என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
  • காற்றுபை போன்ற உப்பக் கூடிய கூடாரம் வகையிலான இந்தத் திரையரங்கம் -28° டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் இயங்கக் கூடியதாகும்

சர்சதேசச் செய்திகள்

ஆப்கானிஸ்தான் மீதான தீர்மானம் (1267) ஏற்பு – UNSC

  • ஆப்கானிஸ்தானை எந்தவொரு நாட்டினை அச்சுறுத்தவோ (அ) தாக்கவோ அல்லது தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கவோ வேண்டி பயன்படுத்தக் கூடாது என இத்தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
  • இத்தீர்மானமானது அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டது.
  • இத்தீர்மானமானது அச்சபையின் 13 உறுப்பினர் நாடுகளின் ஆதரவு வாக்குகளோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    • விளையாட்டுச் செய்திகள்

      நிசாத் குமார் – வெள்ளிப்பதக்கம்

      • நிசாத் குமார் டோக்கியோ 2020 பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியாவிற்குக் கிடைத்த இரண்டாவது பதக்கமாகும்.
      • இவர் 2.06மீட்டர் வரை தாண்டியதன் மூலம் ஆசிய அளவிலான ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.
      Kalam Training Academy | tnpsc coaching center in chennai | trb coaching center in chennai

      Get a Call from our Expert Counsellor

        Please prove you are human by selecting the star.